மாசி பெளர்ணமி 2026.. செய்ய வேண்டியவையும்.. தவிர்க்க வேண்டியவையும்.. | TV9 Tamil News

மாசி பெளர்ணமி 2026.. செய்ய வேண்டியவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..

Published: 

28 Feb 2026 14:04 PM

 IST

Masi Pournami 2026: மாணவர்களுக்கான சிறப்பு பலன்: இந்த மாசி பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை வருவதால், சூரிய பகவான் மற்றும் சந்திர பகவான் ஆகிய இருவரின் அருளும் கிடைக்கும். பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நெய் விளக்கேற்றி, புத்தகங்களை வைத்து வேண்டிப் படிக்கத் தொடங்கினால் நினைவாற்றல் பெருகும்.

1 / 5தமிழ் மாதங்களில் 'மாசி' மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. "மாசி மகம் ஜகத்பிரசித்தம்" என்பார்கள். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரும் மாசி பௌர்ணமி, பக்தர்களுக்கு இரட்டிப்பு பலன்களை வழங்கக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மாதப் பெளர்ணமிக்கும் சிறப்பு பலன்கள் இருந்தாலும், மாசி மாதம் வரும் பெளர்ணமி மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிவபெருமான், விஷ்ணு மற்றும் அம்பிகையின் அருளைப் பெற உகந்த நாளாக அமைகிறது.

தமிழ் மாதங்களில் 'மாசி' மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. "மாசி மகம் ஜகத்பிரசித்தம்" என்பார்கள். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரும் மாசி பௌர்ணமி, பக்தர்களுக்கு இரட்டிப்பு பலன்களை வழங்கக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மாதப் பெளர்ணமிக்கும் சிறப்பு பலன்கள் இருந்தாலும், மாசி மாதம் வரும் பெளர்ணமி மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிவபெருமான், விஷ்ணு மற்றும் அம்பிகையின் அருளைப் பெற உகந்த நாளாக அமைகிறது.

2 / 5

பௌர்ணமி திதி மற்றும் நேரம்: பஞ்சாங்க கணிப்பின்படி, பௌர்ணமி திதியானது மார்ச் 1ம் தேதி அதிகாலையிலேயே தொடங்கி விடுகிறது. அதன்படி, தொடக்கம்: மார்ச் 1, 2026 - அதிகாலை 12:22 மணி. முடிவு: மார்ச் 2, 2026 - அதிகாலை 03:38 மணி. குறிப்பாக, பிப்ரவரி 28 நள்ளிரவு தாண்டியே திதி தொடங்குவதால், மார்ச் 1 ஞாயிறு முழுமையாகப் பௌர்ணமி விரதத்திற்கு உகந்த நாளாகும்.

3 / 5

மாசி பௌர்ணமியின் சிறப்புகள்: இந்த நாளில் சந்திரன் தனது முழுப் பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் தெரிவார். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி 'கடலாடும் நாள்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் நீராடுவது அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். தடைப்பட்ட காரியங்கள் துவங்கவும், குடும்பப் பகைகள் மறையவும் குலதெய்வத்திற்கு மாவிளக்கு போட்டு வழிபடுவது இந்நாளில் மிக விசேஷம். திருவண்ணாமலை போன்ற திருத்தலங்களில் கிரிவலம் செல்வதற்கு மார்ச் 1-ஆம் தேதி மாலை நேரம் மிகவும் உகந்தது.

4 / 5

செய்ய வேண்டியவை: அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள நீர்நிலைகளில் (கடல், ஆறு, குளம்) அல்லது வீட்டிலேயே கங்கை நீரைத் தெளித்து நீராடுவது சிறப்பு. விளக்கு பூஜை: மாலை 6 மணி அளவில் வீட்டின் நிலைவாசல் மற்றும் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சந்திர தரிசனம்: இரவு நிலவு உதயமான பிறகு, நிலவொளியில் அமர்ந்து 'ஓம் சந்திராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மன உளைச்சலைப் போக்கும். தானம்: ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது தயிர் சாதம் வழங்குவது பித்ரு தோஷங்களை நீக்கும்.

5 / 5

தவிர்க்க வேண்டியவை: இந்த முழு நாளிலும் அசைவ உணவுகள் மற்றும் மது போன்ற போதைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. பௌர்ணமி அன்று பெரிய அளவில் பணப் பரிமாற்றங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது; குறிப்பாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

Follow Us