இன்று மாசி அமாவாசை, சூரிய கிரகணம்.. கர்ப்பிணிகள் இதை செய்யாதீர்!! | TV9 Tamil News

இன்று மாசி அமாவாசை, சூரிய கிரகணம்.. கர்ப்பிணிகள் இதை செய்யாதீர்!!

Published: 

17 Feb 2026 15:05 PM

 IST

Masi amavasya 2026; மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புடையதாக மதிக்கப்படுகிறது. முன்னோர்கள் கூறியபடி, இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள், மனித வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என நம்பப்படுகிறது. இந்த நாளில் சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இயற்கையின் சக்திகள் அமைதியான நிலையிலிருக்கும் என்று கூறப்படுகிறது.

1 / 5செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும் செவ்வாய் பகவானுக்கும் உரிய நாள். மாசி அமாவாசை மற்ற அமாவாசைகளை விட மகத்தானது. இது நேற்று மாலை தொடங்கி இன்று மாலை 6.30 வரை நீடிக்கிறது. இன்று சூரிய கிரகணமும் நிகழ்வதால், பிரபஞ்ச சக்தி மிக அதிகமாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும் செவ்வாய் பகவானுக்கும் உரிய நாள். மாசி அமாவாசை மற்ற அமாவாசைகளை விட மகத்தானது. இது நேற்று மாலை தொடங்கி இன்று மாலை 6.30 வரை நீடிக்கிறது. இன்று சூரிய கிரகணமும் நிகழ்வதால், பிரபஞ்ச சக்தி மிக அதிகமாக இருக்கும்.

2 / 5

மாசி அமாவாசை மற்றும் தர்ப்பணம்: மாசி மாத அமாவாசை திதி திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடிக்கிறது. முன்னோர்களுக்குத் திதி அல்லது தர்ப்பணம் கொடுப்பவர்கள், அன்று சூரிய உதயம் முதல் நண்பகல் 12 மணிக்குள் கொடுத்துவிடுவது மிகவும் சிறப்பாகும்.

3 / 5

சூரிய கிரகணம்: பிப்ரவரி 17 இன்று மாலை 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் நேரடியாகத் தெரியாது. கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவை: கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

4 / 5

வெளியே செல்லுதல்: கிரகண நேரத்தில் வெளியாகும் கதிர்வீச்சுகள் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். உணவு: கிரகண நேரத்தில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை கிரகணத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிடுவது செரிமானத்திற்கு நல்லது.

5 / 5

கூர்மையான பொருட்கள்: கத்தி, நகம் வெட்டி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதையோ, காய்கறி வெட்டுவதையோ தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு: மீதமுள்ள உணவுப் பொருட்களின் மீது தற்பை புல் அல்லது துளசி இலைகளைப் போட்டு வைப்பது கதிர்வீச்சுத் தாக்கத்தைக் குறைக்க உதவும். பொதுவான அறிவுரைகள்: கிரகண நேரத்தை இறை வழிபாட்டிற்காகப் பயன்படுத்துவது மன அமைதி தரும்.