Mamitha Baiju: என்னோட ஒரிஜினல் பெயர் அதுதான்.. மமிதா பைஜூ சொன்ன உண்மை! | TV9 Tamil News

Mamitha Baiju: என்னோட ஒரிஜினல் பெயர் அதுதான்.. மமிதா பைஜூ சொன்ன உண்மை!

Updated On: 

15 Mar 2026 21:29 PM

 IST

Mamitha Baijus Real Name: தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கிவரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் மமிதா பைஜூ. இவர் தளபதி முதல் சூர்யாவுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனது உண்மையான பெயர் என்ன என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

1 / 6மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, பின் கதாநாயகியாக அறிமுகமானவர் மமிதா பைஜூ. இவர் தற்போது இளம் நடிகையாகவே தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து புது புது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதிலும் பிரேமலு என்ற படத்தின் மூலம் இவருக்கு பான் இந்திய பிரபலம் கிடைத்தது என்றே கூறலாம்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, பின் கதாநாயகியாக அறிமுகமானவர் மமிதா பைஜூ. இவர் தற்போது இளம் நடிகையாகவே தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து புது புது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதிலும் பிரேமலு என்ற படத்தின் மூலம் இவருக்கு பான் இந்திய பிரபலம் கிடைத்தது என்றே கூறலாம்.

2 / 6

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ரெபெல். இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு தமிழில் தகுந்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து இவருக்கு டியூட் படமானது மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது.

3 / 6

டியூட் படம் வெற்றியாக அமைய, இவர் முதல் முதலில் நடித்த பிக் பட்ஜெட் படம்தான் ஜன நாயகன். இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அதில் அவரின் மகளாக இவர் நடித்துள்ளாராம். இந்த படமானது இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மமிதாவிற்கு பிரபலம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

4 / 6

அந்த வகையில் இவர் தளபதி விஜய்யின் வயதிற்கு இணையான நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சூர்யா மற்றும் மமிதா பைஜூவிற்கு இடையே கிட்டத்தட்ட 22 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என அழைக்கப்படும் நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகவுள்ளது.

5 / 6

நடிகை மமிதா பைஜூவை பற்றி தெரிந்த அனைவருக்குமே, அவரின் உண்மையான பெயர் மமிதா-வா என சந்தேகம் எழுந்திருக்கும். அந்த சந்தேகத்தை தீர்க்கும் நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த மமிதா பைஜூ தனது உண்மையான பெயர் என்ன என்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அது என்ன தெரியுமா?

6 / 6

அதில் மமிதா பைஜூ பேசுகையில், உண்மையிலே எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர் நமிதா பைஜூதான். அது எனது பிறப்பு சான்றிதழ் வரும்போது, அதில் தவறுதலாக மமிதா பைஜூ என டைப் செய்துவிட்டனர். அப்போது எனது பெற்றோர் அதை கவனிக்காமல் விட்டுவிட்டனர். பின் என்னை பள்ளியில் சேர்க்கும்போது, மாற்றவேண்டும் என யோசித்த நிலையில், நான் படித்த பள்ளியில் உள்ள சிஸ்டர் அதை மாற்றவேண்டும் என சொல்லிவிட்டார்கள். அதிலிருந்துதான் எனது பெயர் மமிதா பைஜூ என மாறியது என்று தெரிவித்துள்ளார்.

Follow Us