மகா சிவராத்திரி 2026.. வீட்டில் எளிய முறையில் கால ஜாம பூஜை செய்வது எப்படி? | TV9 Tamil News

மகா சிவராத்திரி 2026.. வீட்டில் எளிய முறையில் கால ஜாம பூஜை செய்வது எப்படி?

Updated On: 

28 Jan 2026 14:39 PM

 IST

Maha Shivaratri 2026: இந்த வருடம் மகா சிவராத்திரி 2026 ஆம் ஆண்டு, பிரபரி மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழில் மாசி மாதம் 3ஆம் தேதி வருகிறது. மகா சிவராத்திரி அன்று, அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, நீராடி, திருநீறு அல்லது விபூதி அணிந்து, சிவபெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.

1 / 5மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில், அம்பிகை சிவபெருமானை வழிபட்ட நாளே மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு, உலகமே கடலில் மூழ்கும் நிலையில், பிரம்மாவும் அவர் படைத்த அனைத்து ஜீவராசிகளும் அழியும் அபாயத்தில் இருந்தபோது, இரவு முழுவதும் பார்வதி தேவி சிவனை நினைத்து நாலு ஜாமங்களிலும் முறையாக பூஜை செய்து வழிபட்டார். அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், உலக ஜீவராசிகளை பிரளயத்திலிருந்து காப்பாற்றி, பார்வதி தேவிக்கு காட்சி அளித்தார். அந்த புனித நாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில், அம்பிகை சிவபெருமானை வழிபட்ட நாளே மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு, உலகமே கடலில் மூழ்கும் நிலையில், பிரம்மாவும் அவர் படைத்த அனைத்து ஜீவராசிகளும் அழியும் அபாயத்தில் இருந்தபோது, இரவு முழுவதும் பார்வதி தேவி சிவனை நினைத்து நாலு ஜாமங்களிலும் முறையாக பூஜை செய்து வழிபட்டார். அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், உலக ஜீவராசிகளை பிரளயத்திலிருந்து காப்பாற்றி, பார்வதி தேவிக்கு காட்சி அளித்தார். அந்த புனித நாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

2 / 5

விரதமும் பூஜை ஆரம்பமும்:இந்த வருடம் மகா சிவராத்திரி 2026 ஆம் ஆண்டு, பிரபரி மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழில் மாசி மாதம் 3ஆம் தேதி வருகிறது. மகா சிவராத்திரி அன்று, அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, நீராடி, திருநீறு அல்லது விபூதி அணிந்து, சிவபெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். முழு நாளும் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் தண்ணீர் மட்டும் அருந்தியும் விரதம் இருக்கலாம். மகா சிவராத்திரியின் நாலு ஜாம கால பூஜை நேரங்களை அறியவும்.

3 / 5

முதல், இரண்டாம் கால ஜாம பூஜை: இது பிரம்ம தேவர் பூஜித்த காலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஜாமத்தில், சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெய் காப்பு அல்லது சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்யலாம். பின் பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம். இரண்டாம் கால ஜாம பூஜை: இந்த காலத்தில் சிவபெருமானை மனமுருகி வழிபட்டு, சிவ மந்திரங்கள், ருத்ரம், நமசிவாய மந்திரம் போன்ற பாராயணங்களை செய்யலாம்.

4 / 5

மூன்றாம், நான்காம் கால ஜாம பூஜை: இந்த ஜாமத்தில் நைவேதியமாக எள்ளுசாதம் அல்லது பழங்கள் வைக்கலாம். பழங்களை நைவேதியமாக வைத்தால், தீய வினைகள் அழிந்து, நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.நான்காம் கால ஜாம பூஜை - அதிகாலை நேரத்தில் நடைபெறும் இந்த ஜாமத்தில், சுத்த அன்னம் (வெள்ளை சாதம்) நைவேதியமாக வைக்கலாம். சாதத்தில் சிறிது நெய் சேர்த்து நைவேதியம் செய்தால், சகல செல்வங்களும், அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

5 / 5

ருத்ராட்ச அபிஷேகம்: வீட்டில் ருத்ராட்ச மாலை, ஜபமாலை அல்லது கழுத்தில் அணியும் ருத்ராட்சம் இருந்தால், மகா சிவராத்திரி அன்று பால், தண்ணீர், பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்து, சிவபெருமானின் முன் வைத்து வழிபட்டால், அந்த ருத்ராட்சத்தின் சக்தி மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரி என்பது வெறும் விரத நாள் மட்டுமல்ல; மனம், உடல், ஆன்மா மூன்றையும் தூய்மைப்படுத்தும் மகா புனித நாள். நாலு கால ஜாம பூஜையையும் எளிய முறையில் செய்தாலே, சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.