Ken Karunaas: எனக்கும் அந்த மாதிரி படம் நடிக்கவேண்டும் என அதிக ஆசை.. ஆனால் – கென் கருணாஸ் ஓபன் டாக்! | TV9 Tamil News

Ken Karunaas: எனக்கும் அந்த மாதிரி படம் நடிக்கவேண்டும் என அதிக ஆசை.. ஆனால் – கென் கருணாஸ் ஓபன் டாக்!

Updated On: 

12 Mar 2026 19:24 PM

 IST

Ken Karunaas Open Talk on Dream Roles: தமிழில் குழந்தை நட்சத்திரம் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் கென் கருணாஸ். இவரின் இயக்கத்தில் யூத் என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் எந்த மாதிரியான படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என்பது தெரிவித்துள்ளார்.

1 / 5கோலிவுட் நடிகர் கருணாஸின் மகன்தான் கென் கருணாஸ். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு மக்களிடையே பிரபலம் அதிகம்.

கோலிவுட் நடிகர் கருணாஸின் மகன்தான் கென் கருணாஸ். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு மக்களிடையே பிரபலம் அதிகம்.

2 / 5

இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தனுஷின் இயக்கத்தில் வெளியான படங்கள் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவரே சினிமாவில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.

3 / 5

தனது இயக்கத்திலும், நடிப்பிலும் யூத் என்ற படத்தின் மூலம் கென் கருணாஸ், இயக்குநர் மற்றும் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இது வரும் 2026ம் மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படம் முழுக்க பள்ளிப்பருவ காதல் மற்றும் ஏமாற்றங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

4 / 5

இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் கென் கருணாஸ் தொடர்ந்து பல நேர்காணல்களில் பேசிவருகிறார். அவ்வாறு ஒரு நேர்காணலில் பேசிய அவர், எந்தமாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அவர் மலையாள நடிகர் நஸ்லென் போல காமெடி ஜானர் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

5 / 5

அதில் கென் கருணாஸ், பிரேமலு படம் போலவே தமிழில் நான் ஒரு படம் பண்ணவேண்டும் என பலரும் என்னிடம் கூறினார்கள். பிரேமலு போன்ற படத்தில் நடிப்பதற்கும் எனக்கு ஆசைதான். ஆனால் எந்த இயக்குநரும் அதுபோன்ற தோற்றத்தில் என்னை பார்க்கவில்லை. நான் அசுரன், விடுதலை என கொஞ்சம் கடுமையான வேடம் இருக்கும் படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு எனது நிஜ கேரட்கருக்கு ஏற்றதுபோல ஜாலியான படத்தில் நடிக்கவேண்டும் என ஆசை என தெரிவித்திருந்தார்.

Follow Us