கார்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும் டேஷ்கேம்.. முக்கியத்துவம் என்ன? | TV9 Tamil News

கார்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும் டேஷ்கேம்.. முக்கியத்துவம் என்ன?

Published: 

11 May 2026 23:44 PM

 IST

Importance of Fixing Dash Cam In Your Car | சாலையில் பயணம் செய்யும்போது விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், கார்களில் டேஷ்கேம் பொருத்துவதன் மூலம் என்ன என்ன நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5சாலையில் பயணம் செய்யும்போது நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்முடன் சாலையில் வாகனம் ஓட்டும் நபர்களும் முறையாக வாகனங்களை ஓட்ட வேண்டும். காரணம், விபத்து என்று ஒன்று நடக்கும்போது இரண்டு தரப்பினரும் விசாரணைக்குள்ளாவர். எனவே நம் மீது தப்பில்லை என்று நிரூபிக்க ஆதாரங்கள் மிகவும் முக்கியவையாக உள்ளன. 

சாலையில் பயணம் செய்யும்போது நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்முடன் சாலையில் வாகனம் ஓட்டும் நபர்களும் முறையாக வாகனங்களை ஓட்ட வேண்டும். காரணம், விபத்து என்று ஒன்று நடக்கும்போது இரண்டு தரப்பினரும் விசாரணைக்குள்ளாவர். எனவே நம் மீது தப்பில்லை என்று நிரூபிக்க ஆதாரங்கள் மிகவும் முக்கியவையாக உள்ளன. 

2 / 5

இவ்வாறு சாலையில் செல்லும்போது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும் ஒரு அம்சம் தான் கார்களின் பொருத்தப்படும் டேஷ் கேமரா. இந்த டேஷ் கேமராவை பொருத்துவதன் மூலம் அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்கப்படும். 

3 / 5

Dashcam (3)

4 / 5

டேஷ்கேம் பொருத்தப்படும்போது வாகன உரிமையாளர் சாலை விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் சுலபமானதாக மாறிவிடும். குறிப்பாக டேஷ்கேம் மூலம் படமாக்கப்பட்ட காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் மிகவும் சுலபமாக இருக்கும்.

5 / 5

தற்போதைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அந்த வகையில், வாகனங்கள் எந்த வித சிக்கல்களில் சிக்கினாலும் யார் மீது தவறு என்பதை கண்டறிய உதவும் மிக சிறந்த அம்சமாக இந்த டேஷ்கேம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us