மீண்டும் உயரும் தங்கம் விலை – இப்போது வாங்கலாமா? காத்திருக்கலாமா? | TV9 Tamil News

மீண்டும் உயரும் தங்கம் விலை – இப்போது வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Published: 

09 Feb 2026 22:47 PM

 IST

Gold and Silver Price : தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், பிப்ரவரி 9,2026 அன்று திங்கட்கிழமை, அவை திடீரென்று அதிகரித்து, மக்களை மீண்டும் அதிர்ச்சியடைய செய்தன. இந்த நிலையில் இப்போது தங்கம் வாங்கலாமா? இல்லை காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

1 / 5கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சரிவுக்கு பின் தங்கத்தின் விலை பிப்ரவரி 9, 2026 அன்று மீண்டும் அதிகரித்துள்ளன பலவீனமான டாலர் மதிப்பு, உலக அளவிலான பதட்டங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற செய்திகளுக்கு மத்தியில், ஜனவரி 9, 2026 அன்று  தங்கத்தின் விலை ரூ.1310 அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலை ஒரே நேரத்தில் ரூ.15 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சரிவுக்கு பின் தங்கத்தின் விலை பிப்ரவரி 9, 2026 அன்று மீண்டும் அதிகரித்துள்ளன பலவீனமான டாலர் மதிப்பு, உலக அளவிலான பதட்டங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற செய்திகளுக்கு மத்தியில், ஜனவரி 9, 2026 அன்று தங்கத்தின் விலை ரூ.1310 அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலை ஒரே நேரத்தில் ரூ.15 ஆயிரம் அதிகரித்துள்ளது.

2 / 5

அமெரிக்காவுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வந்தாலும், யுரேனியத்தை வளப்படுத்தும் உரிமையை ஈரான் விட்டுக்கொடுக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இது தங்கத்தின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

3 / 5

இப்போது, ​​அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உருவாகி வருகின்றன. டாலர் பலவீனமடையும் போது அமெரிக்கா வட்டி விகிதங்களை ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

4 / 5

வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற வட்டி இல்லாத சொத்துக்களை வைத்திருப்பது மிகவும் லாபகரமானது என கருதுகின்றனர்.

5 / 5

தற்போதைய சர்வதேச சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலைகள் சிறிது காலம் நிலையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது விலை குறைந்திருப்பது, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என்பதால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்வது சிறந்தது.