இந்தியா vs ஜிம்பாப்வே போட்டிக்கு மழையால் பாதிப்பா? சென்னை வானிலை நிலவரம் | TV9 Tamil News

இந்தியா vs ஜிம்பாப்வே போட்டிக்கு மழையால் பாதிப்பா? சென்னை வானிலை நிலவரம்

Published: 

26 Feb 2026 14:15 PM

 IST

T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 26, அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மழை குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 / 5
கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி படுதோல்வி அடைந்ததது. இதனால் அரையிறுதி சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி படுதோல்வி அடைந்ததது. இதனால் அரையிறுதி சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2 / 5

இந்த நிலையில் இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால் இந்தியாவின் அரையிறுதி சுற்று கனவுக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலையில் சென்னை வானிலை அறிக்கையின்படி, இந்தியா – ஜிம்பாப்வே போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 5

காலை நேரத்தில் வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும், மாலை மற்றும் இரவு நேரத்தில் அது 27 டிகிரியாக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சில நேரங்களில் மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டாலும், இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5

இதனால் எந்த தடையும் இல்லாமல், முழுமையான 20 ஓவர் போட்டி நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

5 / 5

சூப்பர் 8 சுற்றில் தொடர்ந்தும் முன்னேற இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்த போட்டி இந்திய அணிக்குப் பரபரப்பான ஒன்றாக இருக்கும்.

Follow Us