Anirudh: நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.. AA23 படத்திற்கு அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா? | TV9 Tamil News

Anirudh: நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.. AA23 படத்திற்கு அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Updated On: 

08 Mar 2026 18:19 PM

 IST

Anirudhs AA23 Movie Salary : பான் இந்திய புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுனின் AA23 படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

1 / 5தமிழ் சினிமாவில் ராக்ஸ்டாராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இசையமைப்பாளராக தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் நுழைந்த இவர், தற்போது பான் இந்திய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம்.

தமிழ் சினிமாவில் ராக்ஸ்டாராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இசையமைப்பாளராக தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் நுழைந்த இவர், தற்போது பான் இந்திய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம்.

2 / 5

இசையமைப்பாளர் அனிருத் தமிழில் தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, பல உச்ச நடிகர்களின் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இதன் மூலமாக பல ஹிட் பாடல்களையும் இவர் கொடுத்திருக்கிறார். இவரின் பாடல்கள் ஒருபோதும் மக்கள் மத்தியில் வெறுக்கப்பட்டதில்லை என கூறலாம்.

3 / 5

மேலும் இவர் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். தற்போதும் ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்திற்கும், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணி படத்திற்கும் இவரே இசையமைத்துவருகிறார். அந்த வகையில் ஆண்டிற்கு, 10 படங்களுக்கும் குறையாமல் இவர் பணியாற்றிவருகிறார்.

4 / 5

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படம் முதல், அடுத்தடுத்த படங்களுக்கும் இவரே தொடர்ந்து இசையமைத்துவருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவா நடிக்கும் டிசி படத்திற்கும் இவரே இசையமைக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணி படமான AA23 படத்திற்கும் இசையமைத்துவரும் நிலையில், இதற்கு அதிகம் சம்பளம் பெருகிறாராம்.

5 / 5

இசையமைப்பாளர் அனிருத், அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜின் AA23 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இருக்கிறார். இது பான் இந்திய படமாக உருவாகவுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் 2026ம் ஜூலையில் தொடங்குகிறது. இப்படத்திற்கு இவர் ரூ 25 கோடியை சம்பளமாக பெருகிறாராம். இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார் என கூறப்படுகிறது.

Follow Us