Tripti Dimri: உண்மையான அழகே அதுதான் – அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி பேச்சு! | TV9 Tamil News

Tripti Dimri: உண்மையான அழகே அதுதான் – அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி பேச்சு!

Updated On: 

01 Mar 2026 19:37 PM

 IST

Tripti Dimri Defines True Beauty: பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் நடிகை திருப்தி டிம்ரி. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் உண்மையான அழகு எது என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இவர் பேசிய விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

1 / 5இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கிவருபவர் நடிகை திருப்தி டிம்ரி. இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மாம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து கவர்ச்சி பாணியை பின்பற்ற தொடங்கினார்.

இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கிவருபவர் நடிகை திருப்தி டிம்ரி. இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மாம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து கவர்ச்சி பாணியை பின்பற்ற தொடங்கினார்.

2 / 5

அந்த வகையில் இவருக்கு பான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் அனிமல். கடந்த 2023ம் ஆண்டில் நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான இப்படத்தில், மிக முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார். இப்படத்தில் கவர்ச்சியான வேடத்தில் இவர் நடித்திருந்த நிலையில், இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்திருந்தது.

3 / 5

அனிமல் பட பிரபலத்தை தொடர்ந்து, பேட் நியூஸ், விக்கி வித்யா, பூள் புள்ளையா 3 என அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்திவந்தார். இதையடுத்து இவரின் நடிப்பில் அடுத்தாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் ஓ ரோமியோ. இத்திமல் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ஸ்பிரிட் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

4 / 5

ஸ்பிரிட் என்ற படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் இவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா இதை இயக்கவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேராக்கினால் ஒன்றில் பேசியிருந்த நடிகை திருப்தி டிம்ரி, அதில் உண்மையான அழகு மற்றும் தன்னம்பிக்கை குறித்து பேசியுள்ளர்.

5 / 5

அதில் நடிகை திருப்தி டிம்ரி, தன்னம்பிக்கை மற்றும் நேர்மையே ஒருவருக்கு உண்மையான அழகை தருகிறது. வெளிப்புறத்தில் இருக்கும் அழகை விடவும், உள்ளார்ந்த அமைதியே மிகவும் முக்கியமான விஷயம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இவர் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us