Hair Fall Solutions: கோடையில் அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனையா..? இதை செய்தால் தடுக்கலாம்..!

Healthy Hair Growth: இன்றைய இளைஞர்கள் அநேகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி உதிர்வு. சரியான பராமரிப்பு இல்லாமை, மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் இதற்கு காரணம். ஹேர் ட்ரையர், ஸ்ட்ரைட்டிங் பயன்பாட்டைக் குறைத்து, பொருத்தமான ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும். குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவுவதும், முனைகளை வெட்டுவதும் முக்கியம். தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்.

Hair Fall Solutions: கோடையில் அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனையா..? இதை செய்தால் தடுக்கலாம்..!

முடி உதிர்வு பிரச்சனை

Published: 

15 May 2025 16:52 PM

இன்றைய கால இளைஞர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி உதிர்வு பிரச்சனைதான். சரியான பராமரிப்பு இல்லாமை, மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாடு போன்ற காரணங்களுக்காக முடி உதிர்வு பிரச்சனை உண்டாகிறது. எனவே, எல்லோரும் தங்கள் தலைமுடி அடர்த்தியாகவும், கருப்பாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது ஒரு சில சமயங்களில் தோல்வியை கொடுக்கிறது. நீங்களும் சேதமடையும் முடியால் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு சில விஷயங்களில் கவனமுடன் இருப்பது முக்கியம். சேதமடைந்த முடியை பராமரிப்பதற்காக சில குறிப்புகளை உங்களுக்கு இங்கு சொல்கிறோம். இது உங்களுக்கு உதவி செய்யும். அதேநேரத்தில், முடி உதிர்வு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவர்களை தொடர்புகொள்வது நல்லது.

ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரைடிங் கருவிகளை தவிர்த்தல்:

இளைய தலைமுறை பெண்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் தங்களது தலைமுடி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்றும் ஹேர் ஸ்ட்ரைடிங் உள்ளிட்ட வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துகிறார்கள். இதை அவ்வபோது செய்யலாமே தவிர, அடிக்கடி பயன்படுத்துவது முடி உதிர்வை உண்டாக்கும். உங்கள் தலைமுடியை ஸ்ட்ரைட்டனர், கர்லர் அல்லது ட்ரையர் போன்ற அதிகப்படியான வெப்பமூட்டும் கருவிகளிலிருந்தும் பயன்படுத்தாமல் தள்ளி வைப்பது நல்லது. இவற்றை பயன்படுத்த ஒரு வேளை கட்டாயம் ஏற்பட்டால், ஹீட் புரோடெக்ட் ஹேர் ப்ரே பயன்படுத்தி யூஸ் செய்தால் பாதுகாப்பானது.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர்:

உங்கள் தலைமுடி சேதமடைய கூடாது என்றால், மருத்துவரின் ஆலோசனை பெற்று தலைமுடி வகைக்கு ஏற்ப ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுக்கவும். உங்கள் தலைமுடி வறண்டு அல்லது சேதமடைந்திருந்தால், உங்கள் முடியை வளர்க்க தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.

ஹேர் மாஸ்க்:

உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கொடுக்க விரும்பினால், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பச்சை முட்டை கொண்டு ஹேர் மாஸ்க் போடலாம். இதுமட்டுமின்றி, தலைமுடிக்கு சரியாக எண்ணெய் தடவுவது முக்கியமானது. அதன்படி தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவை முடியை வளர்த்து சேதத்தை குறைக்க உதவி செய்யும்.

குளிர்ந்த நீரை கொண்டு தலைமுடியை கழுவுதல்:

கோடைக்காலம் என்பதால் பலரும் வெப்பம் தாங்காமல் நேராக சென்று ஷவர் முன்பு நின்று, குளிக்க செய்கிறார்கள். கோடைகாலத்தில் குழாய்களில் தண்ணீர் சூடாக வரும் என்பதால், இதுவும் உங்கள் முடியில் சேதத்தை ஏற்படுத்தும். அதன்படி, கோடைக்காலத்தில் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து வைத்து கொள்ளுங்கள். குளிர்ந்த நீரில் முடிவை கழுவும்போது, முடியின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவி செய்யும். எனவே, எப்போதும் உங்கள் தலைமுடியை கழுவ, அலச குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்.

தலைமுடியை வெட்டுங்கள்:

உங்கள் தலைமுடியின் சேதமடைந்த முனைகளை அகற்ற, தலைமுடியை அவ்வபோது தவறாமல் வெட்டுவது முக்கியம். இது முடி வளர்ச்சியை மேம்படுத்த பெரிதும் உதவும். உங்கள் முடியின் சேதமடைந்த முனைகளை வெட்டவில்லை என்றால், அது மேலும் முடி சேதத்திற்கு வழிவகுக்கும்.