Cooking Tips: சமையலில் சொதப்பல் ஆகிவிடும் என்ற பயமா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்..!
Kitchen Tips and Tricks: சமையலறையில் செய்யும் சிறிய தவறுகள் கூட பெரிய பிரச்னைகளை உண்டாக்கலாம். இந்தக் கட்டுரை, சாதாரண சமையல் தவறுகளைத் தவிர்க்கவும், உணவின் சுவையை மேம்படுத்தவும் எளிய குறிப்புகளை வழங்குகிறது. பக்கோடா, இனிப்புகள், சாதம், கிரேவி, பூரி, ஹல்வா, ஆம்லெட் போன்றவற்றைச் செய்யும்போது பயன்படுத்தக்கூடிய சிறப்பு குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

சமையலறை குறிப்புகள்
சமையலறையில் (Kitchen) நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரியளவில் சொதப்பலை கொடுத்துவிடும். இதன்காரணமாகவே, பெரும்பாலான மக்கள் சமைப்பதை தவிர்க்கிறார்கள் உணவு லேசாக பிடித்துவிட்டாலோ அல்லது சரியாக சமைக்கப்படவில்லை என்றாலோ, உணவு சுவையை தராது. இதன் காரணமாகவே, மக்கள் சமைக்க பயப்படுகிறார்கள். ஆனால், மக்கள் நினைப்பது போல் சமையல் (Cooking) ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல. இந்த எல்லா தவறுகளுக்கும், சமையலறையில் இந்த குறிப்புகளை செய்வதன்மூலம் ஈஸியாக சமைக்கலாம். மேலும், இது உணவுக்கு கூடுதல் சுவையும் தரும். சமைப்பது என்பது ஒரு கலை போன்றது. இதை கொஞ்சம் பொறுமையுடனும் கவனத்துடனும் செய்தால், இது வேறுமாதிரியான சுவையை தரும். நீங்களும் சமையலை புதிதாக கற்றுக்கொள்கிறீர்கள் என்றால், இந்த டிப்ஸ் நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படியான சூப்பரான சமையலறை குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
சமையலறை டிப்ஸ்:
- வீட்டில் வெங்காய பக்கோடா தயாரிக்கிறீர்கள் என்றால், அது தயாரிக்கும்போது அதில் சிறிது அரிசி மாவு சேர்க்கலாம். இது இன்னும் பக்கோடாக்கள் மொறுமொறுப்பாக இருக்க உதவி செய்யும்.
- வீட்டில் எந்த இனிப்பு உணவையும் தயாரிக்கும்போதும், அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம். இது அதன் சுவையை இன்னும் அதிகரிக்கும்.
- சாதம் வேகவைக்கும்போது, தண்ணீரில் 1 ஸ்பூன் நெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது அரிசியை பஞ்சுபோன்றதாகவும், வெண்மை நிறத்தை தரும்.
- சிக்கன் கிரேவியோ அல்லது மட்டன் கிரேவியோ சமைக்கும்போது அதன் சுவையை அதிகரிக்க, வெங்காயத்தை வதக்கும்போது அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். அதாவது சர்க்கரை கேரமல் போல மாறி, குழம்புக்கு நல்ல நிறத்தையும் சுவையையும் தரும்.
- பூரிகளை உருட்டி, பொரிப்பதற்கு முன் 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இப்படி பொரிப்பதன் மூலம், அதிக எண்ணெயும் உறிஞ்சப்படாது. பூரியும் நன்று புசு புசுவென்று வரும்.
- ஹல்வா செய்வதற்காக ரவையை வறுக்கும்போது, அதனுடன் அரை ஸ்பூன் கடலை மாவை சேர்க்கலாம். இது ஹல்வாவின் சுவையை மேலும் இரட்டிப்பாக்கும்.
- நீங்கள் சமைத்த கிரேவி அல்லது குழம்புகளில் அதிகப்படியான எண்ணெய் அல்லது நெய் இருந்தால், அதை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைக்கலாம். அப்போது, மேலே இருக்கும் எண்ணெய் கெட்டியாகிவிடும். அதன்பின், இதை எளிதாக எடுத்துவிட்டு, மீண்டும் சூடு செய்து சாப்பிடலாம்.
- வெண்டைக்காய் நீங்கள் எப்போது சமைத்தாலும் பிசுபிசுவென இருந்தாலும், வெண்டைக்காய் சமைக்கும்போது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். எலுமிச்சை சாறு சேர்க்கும்போது ஒட்டும் தன்மை மறைந்துவிடும். இதுதவிர, வெண்டைக்காய் சமைக்கும்போது 1 ஸ்பூன் வறுத்த கடலை மாவையும் சேர்க்கலாம். இது ஒட்டும் தன்மையை நீக்குவதன் மட்டுமல்லாமல், மொறுமொறுப்பாக மாற்றும்.
- ஆம்லேட் செய்யும்போது முட்டையை உடைத்து அடைக்கும்போது, அதனுடன் 2 ஸ்பூன் பால் சேர்க்கலாம். இது ஆம்லேட்டை மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும் மாற்றும்.