ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள்.. சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்.. எல்லையில் பரபரப்பு!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக 7 பயங்கரவாதிகளை பாதுகாப்ப படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.

ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள்.. சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்.. எல்லையில் பரபரப்பு!

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Updated On: 

09 May 2025 17:06 PM

காஷ்மீர், மே 09: ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக  (kashmir attack) தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக 7 பயங்கரவாதிகளை பாதுகாப்ப படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சம்பா எல்லை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. மே 8ஆம் தேதி இரவு பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்து இருக்கின்றனர்.

7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “2025 மே 8ஆம் தேதி 11 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை BSF முறியடித்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதுகுறித்த வீடியோவை என்ஐஏ வெளியிட்டுள்ளது.   பஹல்காம் தாக்குதலுக்கு  பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது 2025 மே 7ஆம் தேதி இரவு தாக்குதலை மேற்கொண்டு. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு என 9 இடங்களில்  உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும்  மேற்பட்ட பயங்கரவாகிதள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் சிந்தூருக்கு 2025 மே 8ஆம் தேதியான நேற்று இரவு பாகிஸ்தான்  ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என 15க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலை இந்தியா முறியடித்துள்ளது. அதாவது, எஸ் 400 ஆயுதம் மூலம்  50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை  சுட்டு வீழ்த்தியது.

எல்லையில் பரபரப்பு

வீடியோ


இதன் மூலம், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன் உள்ளே வருவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பெரும் சேதம்  தவிர்க்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானிடம் பொதுவாக ஆயுதங்கள் இல்லை என்று தெரிகிறது. மேலும், பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. எனவே, பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா என்பது  கேள்விக்குறிதான். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சசர் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.