வரலாற்றில் முதல்முறை… தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Jaishankar Speaks To Taliban Foreign Minister : இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதட்டம் தற்போது தணிந்து வரும் நிலையில் இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தே வருகிறது. பஹல்காம் தாக்குதலின்போதும், ஆபரேஷன் சிந்தூர் பதிலடியின்போதும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்த நாடுகளை இந்தியா கவனித்து வருகிறது. அந்த நட்பை பேணுவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

வரலாற்றில் முதல்முறை... தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

ஜெய்சங்கர் - அமீர் கான் முத்தகி

Updated On: 

16 May 2025 08:56 AM

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் நிர்வாகம் ஏற்று இந்தியா மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ தொடர்பு இதுவாகும். இந்த முதல் தொலைபேசி உரையாடலில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முத்தகியின் கண்டனத்தை ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.

தொலைபேசி உரையாடல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ”ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் சிறந்த உரையாடல் நிகழ்ந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.பொய்யான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகள் மூலம் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே அவநம்பிக்கையை உருவாக்குவதற்கான சமீபத்திய முயற்சிகளை அவர் கடுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களுடனான நமது பாரம்பரிய நட்பையும் அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதையும் குறிப்பிட்டு உரையாடினோம். இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ். ஜெய்சங்கர் பதிவு

ஆப்கன் தரப்பு சொன்னது என்ன?

இந்த உரையாடல் குறித்து பேசியுள்ள தாலிபானின் தகவல் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது, இந்த உரையாடலின்போது, ​​ஆப்கானிய நாட்டில் இருந்து இந்தியாவை தேடி மருத்துவ உதவியை நாடுபவர்களுக்கு கூடுதல் விசாக்களை வழங்குமாறு ஜெய்சங்கரிடம், முத்தாகி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இருதரப்பு வர்த்தகம், இந்திய சிறைகளில் உள்ள ஆப்கானிய கைதிகளை விடுவித்தல் மற்றும் மீண்டும் நாட்டுக்கே திருப்பி அனுப்புதல் மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவு