பீகாரில் நடந்த சம்பவம்.. ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு.. நடந்தது என்ன?

Rahul Gandhi In Bihar : பீகார் மாநிலத்தில் அனுமதியின்று நிகழ்ச்சி நடத்தியதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அவருடன் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையின் தடையை மீறி ராகுல் காந்தி அம்பேத்கர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார்.

பீகாரில் நடந்த சம்பவம்.. ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு..  நடந்தது என்ன?

ராகுல் காந்தி

Updated On: 

16 May 2025 08:59 AM

பீகார், மே 16 : பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாட சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2025 மே 15ஆம் தேதியான நேற்று போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அம்பேத்கர் விடுதியில் நிகழ்ச்சி ஒன்றையும் அவர் ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படடுள்ளது. அனுமதியின்று நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பீகாரில் அம்பேத்கர் விடுதியில் சிக்ஷா நியாய் சம்வாத் என்ற பெயரிலான மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க மறுத்தது.

ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு

இருப்பினும், தடையை மீறி ராகுல் காந்தி மாணவர் விடுதிக்கு சென்று மாணவர்கள் சந்தித்து பேசினார். காவல்துறை மறுத்த போதிலும், ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். இதனால், அவர் மீது சிஆர்பிசி 163 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஹேரியசராய் காவல் நிலையத்தில் மாவட்ட நல அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக தர்பங்கா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்பேத்கர் விடுதியில் நிகழ்ச்சிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் அது தடை உத்தரவுகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, “ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் அரசு அதிகாரிகள் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் அமைதியாக உள்ளே செல்ல விரும்புகிறோம். ஆனால் அவர்களால் எங்களைத் தடுக்க முடியாது. என் மீது கிட்டத்தட்ட 32-33 வழக்குகள் பதியப்பட்டுள்ளன, ஆனால் இவை அனைத்தும் எனக்கு பதக்கங்கள்” என்று கூறினார்.

நடந்தது என்ன?

முன்னதாக, மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கோருவேன். உங்கள் உரிமைகளைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். நீங்கள் அனைவரும் உங்கள் பலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் சாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டேன். பொதுமக்களின் அழுத்தம் மற்றும் பயம் காரணமாக, அவர் இந்தியாவில் சாதி கணக்கெடுப்பை அறிவித்தார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் சாதி கணக்கெடுப்பு மற்றும் அரசியலமைப்பை எதிர்க்கிறார். இந்த அரசாங்கம் உங்களைப் பற்றி அல்ல, அதானி மற்றும் அம்பானியைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது” என்று தெரிவித்தார்.