தொடர்கிறது போர் நிறுத்தம்… உறுதி செய்த இந்திய ராணுவம்.. முடிந்ததா பிரச்னை?

India Pakistan Ceasefire : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்கிறது என்று இந்தியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், 2025 மே 18ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், இந்தியா ராணுவம் தற்போது அதற்கு மறுத்துள்ளது.

தொடர்கிறது போர் நிறுத்தம்... உறுதி செய்த இந்திய ராணுவம்.. முடிந்ததா பிரச்னை?

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்

Updated On: 

18 May 2025 11:28 AM

டெல்லி, மே 18 : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் (India pakistan ceasefire) தொடர்கிறது என்று இந்தியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், 2025 மே 18ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், இந்தியா ராணுவம் தற்போது அதற்கு மறுத்துள்ளது. மேலும், 2025 மே 12ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 2025  ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில்  அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்கிறது போர் நிறுத்தம்

இதற்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும்,  பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா கூறியது. இதனால்,  பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க  ஆப்ரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது.  அதன்படி,  பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இப்படி, இரு நாடுகளுக்கு இடையே மூன்று நாட்கள்  தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வந்தது. இதனை அடுத்து, இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.  இதற்கிடையில்,  போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், 2025 மே 18ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், இந்தியா ராணுவம் தற்போது அதற்கு மறுத்துள்ளது.

முடிந்ததா பிரச்னை?

அதாவது,  இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்கிறது என்று இந்தியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், 2025 மே 18ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது என்ற தகவலுக்கு இந்தியா ராணுவம் தற்போது மறுத்துள்ளது.  இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “ராணுவ இயக்குநர் தலைமையிலான ஆலோசனை எதுவும் இல்லை.

மே 12ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்ட  இந்தியா பாகிஸ்தான்    இடையே போர் நிறுத்தம் தொடர்கிறது. காலவரம்பின்றி போர் நிறுத்தம் தொடர்கிறது” என்றனர். இதற்கிடையில்,  இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் உட்பட ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களிலும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக தாக்குதல் நடத்தியது.  இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. மேலும் எதிர்காலத்தில் போர் நிறுத்த மீறல்கள் நடந்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.