தாலி கட்டிய மறுநொடியே பிரிந்த மணமகன் உயிர்… உறவினர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
Karnataka Groom Dies : கர்நாடகாவில் திடீரென மாரடைப்பால் மணமகன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாலி கட்டிய சில நொடிகளிலேயே மணமகன் மேடையில் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து, அவரை உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

மாதிரிப்படம்
கர்நாடக, மே 18 : கர்நாடகாவில் திருமணத்தின்போது மணமகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலி கட்டிய சில நொடிகளிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மணமகன் உயிரிழந்தது இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீக காலமாகவே திடீர் மாரடைப்பால் இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கொரோன காலக்கட்டத்திற்கு பிறகு இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருகிறது. சிறார்கள் முதல் இளைஞர்களுக்கு திடீரென மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன உளைச்சல், மதுபானம், துரித உணவுகளை போன்றவையால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
தாலி கட்டிய மறுநொடியே பிரிந்த மணமகன் உயிர்
இந்த நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் ஜமகண்டி நகரில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கும்பரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25) மற்றும் பூஜா என்பவருக்கு திருமணம் நடந்தது. அப்போது, தாலி கட்டிய சில நொடிகளிலேயே மணமேடையிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். உயிரிழந்த இளைஞரின் உடல் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல. கடந்த 2025 பிப்ரவரி மாதம் திருமண விழாவில் நடனமாடும் போது, 23 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தைச் சேர்ந்த பரினிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நடனமாடும்போது திடீரென மேடையில் சரிந்து விழுந்துள்ளார்.
உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறினர். மேலும், மத்தியப் பிரதேசத்தின் அகர்-மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார். தேபோல், இந்தூர் நகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் நடனமாடும் போது 73 வயது முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் சமீப நாட்களில் அதிகரிப்பது மக்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. எனவே, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், மார்பு வலி தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மேலும், அதிகபடியாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மன உளைச்சல் இருந்து முறையாக கவுன்சிலிங் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். மேலும், மதுபானம், சிகரெட் போன்றவை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.