Operation Sindoor: ராவல்பிண்டி வரை அச்சுறுத்தல்! இதுதான் இந்தியா இராணுவம்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

BrahMos Aerospace Facility Opens in Lucknow: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வசதி இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும். ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

Operation Sindoor: ராவல்பிண்டி வரை அச்சுறுத்தல்! இதுதான் இந்தியா இராணுவம்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published: 

11 May 2025 15:20 PM

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் (Lucknow) பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை செய்யும் வசதியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) காணெளி மாநாடு மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரிஜேஷ் பதக் ஆகியோரும் உடனிருந்தனர். பிரம்மோஸ் (Brahmos Missile) என்பது உலகின் மிகவும் அழிவுகரமான சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஆகும். இதை தொடர்ந்து, இந்த மாநாட்டில் டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் மெட்டீரியல்ஸ் ஆலையை திறந்து வைத்தனர். இந்த ஆலை விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான உயர்தர பொருட்களை உற்பத்தி செய்து, சந்திரயான் பணி மற்றும் போர் விமானங்கள் தயாரிக்க உதவும் பொருட்களை வழங்கும்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங்:

லக்னோவில் பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியை திறந்து வைத்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையின் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை நாங்கள் காட்டினோம். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆபரேஷன் சிந்தூரை இந்திய இராணுவம் தொடங்கியது. இதில், இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆனால், காரணம் இன்றி பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவில் சாதாரண மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதலை நடத்த முயற்சி செய்தது. இதையெல்லாம் முறியடித்து இந்திய இராணுவம் தைரியத்தையும், நிதானத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பல ராணுவ தளங்களைத் தாக்கி தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. எல்லையை ஒட்டியுள்ள ராணுவ தளங்கள் மீது மட்டும் நாங்கள் நடவடிக்கை எடுத்ததில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி வரை இந்தியப் படைகள் அச்சுறுத்தலை கொடுத்தது” என்று தெரிவித்தார்.

உலகம் பார்க்கிறது:

உரி சம்பவத்திற்கு பிறகு, இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோது, இந்தியாவை உலகம் பார்த்தது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, ​​அதை உலகம் கண்டது. இப்போது பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து பல தாக்குதல்களை நடத்தியதை உலகம் காண்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகஎல்லையின் இருபுறமும் பயங்கரவாதத்திற்கு எதிராக
பயனுள்ள நடவடிக்கை எடுக்கும் புதிய இந்தியா இதுதான் என்பதை நமது பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.