பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி? வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

India Pakistan Conflict : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எப்படி முறியடித்தது என்பதை காட்டுகிறது. இதனை தனது எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி? வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

Updated On: 

09 May 2025 17:07 PM

டெல்லி, மே 09 : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை (India Pakistan Conflict) இந்தியா முறியடித்தது குறித்த வீடியோவை இந்திய ராணுவம் (Indian Army) வெளியிட்டுள்ளது. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எப்படி முறியடித்தது என்பதை காட்டுகிறது. இதனை தனது எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவம் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. மேலும், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய ராணுவம், “2025 மே 8 மற்றும் 9ஆம் தேதி இரவி எல்லையில் ட்ரோன்கள் மற்றும் பிற வெடி மருந்துகளை பயன்படுத்தி பல தாக்குதலை நடத்தின.

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி?

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ட்ரோன்களுக்கு போர் நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன. மேலும், பதிலடி கொடுக்கப்பட்டன. இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. நேற்று இரவு முழுவதுமே தாக்குதல் நடத்த முயன்றது.

இதனை இந்தியா முறியடித்துள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், அவந்திரபுரா, பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, லூதியானா, ஆதம்பூர், ராஜஸ்தானின் புஜ், சண்டிகர் ஆகிய 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றது. இதனை, இந்தியாவின் s-400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பு திறம்பட சுட்டு வீழ்த்தினர்.  இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.

வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்

இப்படியான சூழலில்,  இந்தியா ராணுவம்  பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்திய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது.  இந்த தாக்குதலில் கிட்டதட்ட 50 ட்ரோன் இந்தியா அழித்துள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோடா மற்றும் பதான்கோட் பகுதிகளில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா.  நேற்று இரவு முழுவதும் விடிய விடிய தாக்குதல் நடந்ததை அடுத்து,  எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2025 மே 9ஆம் தேதியான இன்று காலை 9 மணியளவில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்ப நடைபெறும் என தெரிகிறது.