Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

4 children died while locked up in car | ஆந்திர பிரதேசத்தில் காருக்குள் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 4 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 May 2025 09:06 AM

ஆந்திர பிரதேசம், மே 19 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) காருக்குள் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 4 பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக காருக்குள் ஏறிய நிலையில், இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர்கள் திருமணம் விழாவிற்காக குழந்தைகளை அழைத்துச் சென்ற நிலையில், காருக்குள் விளையாட சென்ற சிறுவர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காருக்குள் விளையாட சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

ஆந்திர பிரதேச மாநிலம், துவாரபுடி கிராமத்தில் காரில் ஏறி விளையாட சென்ற 4 சிறுவர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக தங்களது பெற்றோர்களுடன் வந்த சிறுவர்கள் நான்கு பேர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர். அப்போது திடீரென கார் லாக் ஆகி உள்ளது. இதனால் வெகு நேரமாக காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிறுவர்கள் தவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 6 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சிறுவர்கள் உயிரிழந்தது எப்படி – அமைச்சர் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆந்திர பிரதேச அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ், திருமண நிகழ்வுக்கு வந்தபோது இந்த கோர நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் அருகில் இருந்த காரில் ஏறி விளையாட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர்கள் தங்களை காருக்குள் வைத்து பூட்டிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காருக்குள் சிக்கி சிறுவர்கள் உயிரிழந்த பிறகு தான் அது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு அது குறித்து தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், காருக்குள் சிக்கி மூச்சு திணறி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்
இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்......
இனி வரும் நாட்களில் மழையா? வானிலை ஆய்வு மைய தலைவர் எச்சரிக்கை!
இனி வரும் நாட்களில் மழையா? வானிலை ஆய்வு மைய தலைவர் எச்சரிக்கை!...
சூர்யாவின் 46வது படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் மமிதா பைஜூ!
சூர்யாவின் 46வது படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் மமிதா பைஜூ!...
ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்?
ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்?...
கிழக்கு நோக்கிய திசையில் தட்சிணாமூர்த்தி.. இந்த கோயில் தெரியுமா?
கிழக்கு நோக்கிய திசையில் தட்சிணாமூர்த்தி.. இந்த கோயில் தெரியுமா?...
கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுப்போகிறதா..? தடுப்பது எப்படி..?
கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுப்போகிறதா..? தடுப்பது எப்படி..?...
பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?
பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?...
25 வருடங்களை கடந்தது விஜய் - ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம்!
25 வருடங்களை கடந்தது விஜய் - ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம்!...
பிளே ஆஃப் பந்தயத்தில் ஒரு இடம் காலி.. எந்தெந்த அணிக்கு வாய்ப்பு?
பிளே ஆஃப் பந்தயத்தில் ஒரு இடம் காலி.. எந்தெந்த அணிக்கு வாய்ப்பு?...
விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் 'பகவந்த் கேசரி' பட காட்சியா?
விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் 'பகவந்த் கேசரி' பட காட்சியா?...