மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு.. லிட்டருக்கு இவ்வளவா?

Amul Mother Dairy Milk Price Hike : அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. பால் விலை உயர்வு 2025 மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாதத்தின் முதல் நாளே பால் விலை உயர்ந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு..  லிட்டருக்கு இவ்வளவா?

அமுல் பால் விலை உயர்வு

Updated On: 

01 May 2025 10:27 AM

இந்தியாவின் பிரபல பால் நிறுவனமான அமுல் (Amul Milk Price Hike) மற்றும் மதர் டெய்ரி தனது பால் விலையை உயர்த்தியுள்ளது.  அமல் மற்றும் மதர் டெய்ரி பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த பால் விலை உயர்வு 2025 மே 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக, அமுல் பாலை மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் அமல் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமுல் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் அமல் பால் விற்பனை நன்றாக சென்றுக் கொண்டு இருக்கிறது. பால் விற்பனையோடு இல்லாமல், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றையும் அமுல் நிறுவனம் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், அமுல் நிறுவனத்தின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. 2024 ஜூன் மாதத்திற்கு பிறகு, தற்போது அமுல் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பால் விலை மே 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “அமுல் பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் ஜி.சி.எம்.எம்.எஃப், நாட்டின் அனைத்து சந்தைகளிலும் மே 1, 2025 முதல் புதிய பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது” என கூறப்பட்டு இருக்கிறது.

பால் விலை அதிரடி உயர்வு

அமுலின் கூற்றுப்படி, இந்த விலை உயர்வு அதிகபட்ச சில்லறை விலையில் 3 முதல் 4 சதவீதம் இருக்கும் என்று கூறியுள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் உணவு பணவீக்கத்தை விட குறைவாகவே இந்த விலை உயர்வு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.  பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்து வருவதால் இந்த விலை அவசியமாக உள்ளது என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமல் எருமை பால் லிட்டருக்கு ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமுல் கோல்ட் பால் லிட்டருக்கு 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமுல் டி ஸ்பெஷல் பால் லிட்டருக்கு 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமுல் சக்தி பால் லிட்டருக்கு 61 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமுல் Taaza பால் லிட்டருக்கு 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமுல் பசு பால் லிட்டருக்கு 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளது. இதன் மூலம், மதர் டெய்ரி நிறுவனத்தின் ஃபுல் க்ரீம் பாலின் விலை லிட்டருக்கு ரூ.68-ல் இருந்து ரூ.69 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.