Jana Nayagan : தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?

Jana Nayagan Movie Update : தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் வாங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

Jana Nayagan : தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?

ஜன நாயகன் படம்

Published: 

04 Jun 2025 21:39 PM

இயக்குநர் ஹெச். வினோத்தின் (H.Vinoth)  முன்னணி இயக்கத்தில் இறுதியாக வெளியான பிரம்மாண்ட படம் துணிவு (Thunivu). நடிகர் அஜித்தின் இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாகத் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay)  69வது திரைப்படத்தின் இயக்குநராக இணைந்தார். இந்த 69வது திரைப்படத்திற்கு ஜன நாயகன் (Jana Nayagan)  என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அவரின் இறுதி படம் என்பதால் ஒட்டுமொத்த தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஜன நாயகன் படத்தைப் பிரபல கர்நாடகா தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனமானது தயாரித்து வருகிறது. விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் மிகவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருகிறது.

இப்படம் சுமார் ரூ. 400 கோடி பொருட்செலவில் உருவாகிவருவதாக, வட்டாரங்கள் கூறிவருகின்றன. இந்நிலையில் விஜய்யின் இறுதி படம் என்பதால் இப்படத்தையும் பெரிய விலைக்குத் தமிழக ரிலீஸ் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ அல்லது கோட் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். என்டேர்டைமென்ட் நிறுவனம் வாங்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் விஜய்யின் 69வது படம்தான் ஜன நாயகன். இந்த படமானது மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜைகள் மற்றும் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. அது தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இது தொடர்ந்து நடிகர் விஜய் கடந்த, 2025, ஜூன் 2ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியது. ஆனால் இது குறித்து இன்னும் அறிவிப்புகள் எதுவும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் இறுதி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர்கள் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், மேலும் நடிகை ரேவதி விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவுள்ளது. 2026ம் மானுட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம் கோலிவுட் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.