Unni Mukundan : ‘மார்கோ 2 படம் டிராப்’ – நடிகர் உன்னி முகுந்தன் கொடுத்த விளக்கம்!

Marco Movie Sequel Dropped : கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த மலையாள சினிமாவையே புரட்டிப்போட்ட திரைப்படம்தான் மார்கோ. இப்படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். பாகம் 1ன் வெற்றியைத் தொடர்ந்து மார்கோ 2 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட்டதாக நடிகர் உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.

Unni Mukundan : மார்கோ 2 படம் டிராப் - நடிகர் உன்னி முகுந்தன் கொடுத்த விளக்கம்!

நடிகர் உன்னி முகுந்தன்

Published: 

15 Jun 2025 16:27 PM

மலையாள சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருந்து வருபவர் உன்னி முகுந்தன் (Unni Mukundan). இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2024ம் ஆண்டு நடிகர்கள் சூரி (soori), சசிகுமார்  (Sasikumar) இணைந்து நடித்திருந்த கருடன் (Garudan) படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் மார்கோ (Marco). இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் ஹனீஃப் அதேனி இயக்கியிருந்தார்.

இந்த படமானது கடந்த 2024, டிசம்பர் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது தென்னிந்திய சினிமாவில் , குறிப்பாக மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மார்கோ 2 படம் உருவாக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்த படம் கைவிடப்பட்டதாக நடிகர் உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தன் கூறிய விஷயம் :

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரசிகர் ஒருவருக்கு கமெண்டில் பதிலளித்த நடிகர் உன்னி முகுந்தன், “மார்கோ படத்தை தொடரும் திட்டத்தை மார்கோ கைவிடப்பட்டது. இந்தப் படத்தை சுற்றி நிறைய எதிர்மறை கருத்துக்கள் உள்ளன. மார்கோவை விட ஒரு பெரிய மற்றும் சிறந்த படமாக கொண்டு வர நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி” என உன்னி முகுந்தன் கமெண்டில் ரசிகருக்குப் பதிலளித்தார். தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் உன்னி முகுந்தன் சொன்ன பதிவு :

மார்கோ வெற்றி :

இயக்குநர் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் நடிகர்கள் சித்திக் , ஜெகதீஷ் , அன்சன் பால், கபீர் துஹான் சிங் மற்றும் அபிமன்யு ஷம்மி திலகன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் மிகவும் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.

இந்த படமானது பாலிவுட்டில் வெளியான அனிமல் படத்திற்கு நிகரான கதைக்களத்தில் இருந்தது என்றே கூறலாம். சுமார் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 110 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.