Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவின் ‘மதராஸி’ – எப்போ ரிலீஸ் தெரியுமா?

Sivakarthikeyan's Madharasi Release Date: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவின் ‘மதராஸி’ – எப்போ ரிலீஸ் தெரியுமா?
Sivakarthikeyan Madharasi
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 Apr 2025 18:28 PM

அமரன்(Amaran) படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. தர்பார் படத்துக்கு பிறகு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் (A.R.Murugadoss) இயக்கியுள்ள படம் இது. ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க, வில்லனாக துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜாம்வால் களமிறங்கியிருக்கிறார். மேலும் மலையாள நடிகர் பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். டான் படத்தைத் தொடர்ந்து சிறிது இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் – அனிருத் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. சர்கார் தொடங்கி, தர்பார், சிக்கந்தர் வரை முருகதாஸின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

சில ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ஒரு படத்தை முருகதாஸ் இயக்கவிருந்தார். ஆனால் அந்தப் படத்தின் கதை தயாரிப்பு தரப்புக்கு பிடிக்காததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ முதல் ‘துப்பாக்கி’ இயக்குநர் படத்தில் சிவகார்த்திகேயன்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படம் அவருக்கு தமிழில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத் தந்த படம். இந்த நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயனைப் பார்த்து விஜய் பேசிய, ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ டயலாக் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பீரியட் படமாக இது உருவாகி வருகிறது.

பராசக்தி தலைப்புக்கு எதிர்ப்பு

டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.  ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் பராசக்தி என்ற கல்ட் கிளாசிக் படம் தமிழில் இருக்கிறது. தமிழ் சினிமாவின் முதல் அரசியல் படமாக கருதப்படும் இந்தப் படம் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைத்ததற்கு ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரைம் வீடியோவில் விளம்பரமில்லாமல் பார்க்க இவ்வளவு கட்டணமா?
பிரைம் வீடியோவில் விளம்பரமில்லாமல் பார்க்க இவ்வளவு கட்டணமா?...
உலக கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கவாஸ்கர் கருத்து!
உலக கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கவாஸ்கர் கருத்து!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தால் தங்கம் விலை 3.7% குறைவு!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தால் தங்கம் விலை 3.7% குறைவு!...
ஜம்மு காஷ்மீரில் அதிரடி.. 3 பயங்கரவாதிகளை அழித்த இந்திய இராணுவம்!
ஜம்மு காஷ்மீரில் அதிரடி.. 3 பயங்கரவாதிகளை அழித்த இந்திய இராணுவம்!...
மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா...
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் அதிர்ச்சி!
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் அதிர்ச்சி!...
பொள்ளாச்சி வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு
பொள்ளாச்சி வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு...
CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!...
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?...
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?...
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?...