Samantha Ruth Prabhu : ஜிம்மிற்கு சென்ற சமந்தா.. வீடியோ எடுத்து கடுப்பாக்கிய ரசிகர்கள்..!

Samantha Ruth Prabhu Gets Angry With Fans :தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் இந்தியா அளவிற்குப் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் சென்ற சமந்தாவை ரசிகர்கள் வீடியோ எடுத்துக் கோபப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha Ruth Prabhu : ஜிம்மிற்கு சென்ற சமந்தா.. வீடியோ எடுத்து கடுப்பாக்கிய ரசிகர்கள்..!

சமந்தா ரூத் பிரபு

Published: 

17 Jun 2025 21:58 PM

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் (Samantha Ruth Prabhu) தயாரிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சுபம் (Subham). தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படத்தை இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா (Praveen Kandregula) இயக்கியிருந்தார். இந்த சுபம் படமானது  ஹாரர் மற்றும் நகைச்சுவை (Horror and comedy)  திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை நடிகை சமந்தா புதுமுக நடிகர்களை வைத்துத் தயாரித்திருந்தார். சமந்தாவின் டரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ்  (Taralala Moving Pictures) என்ற நிறுவனமானது இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகை சமந்தா மேலும் படங்களைத் தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘

அந்த வீடியோவில் ஜிம்மில் (Gym)  உடற்பயிற்சியை (Exercise) முடித்துவிட்டு வந்த சமந்தாவிடம் ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்தது அவரை எங்கும் நகரவிடாமல் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை சமந்தா அதைப் பார்த்துக் கோபப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இணையத்தில் வைரலாகும் சமந்தா கோபப்படும் வீடியோ :

நடிப்பதைத் தவிர்க்கிறாரா சமந்தா?

நடிகை சமந்தாவின் முன்னணி நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படங்களும் உருவாகவில்லை. இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாகக் குஷி என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு வெளியான சிட்டாடல் ஹன்னி பன்னி என்ற வெப் தொடரில் வருண் தேவுடன் இணைந்து ஆக்ஷ்ன் நாயகியாக நடித்திருந்தார். இந்த வெப் தொடரானது இந்தி மொழியில் வெளியாகியிருந்தது. இந்த வெப் தொடரை அடுத்து தனது தயாரிப்பில் வெளியான சுபம் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பு ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மேலும் முழுவதுமாக திரைப்படங்கள் தயாரிப்பதில் இறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.