விஷாலுடன் காதல் – திருமணம் எப்போது? – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா

Sai Dhanshika announced marriage with Vishal : நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் யோகிடா என்ற பட விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையயில் மேடையில் விஷாலுடன் திருமணம் குறித்து சாய் தன்ஷிகா அறிவித்திருக்கிறார்.

விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா

விஷால் - சாய் தன்ஷிகா

Updated On: 

19 May 2025 21:12 PM

நடிகர் விஷால்  (Vishal) நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12, 2025  ஆம் ஆண்டு மத கஜ ராஜா (Madha Gaja Raja) படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியான இந்தப் படம் அனைவரும் ஆச்சரியம் படும்படி மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. மார்க் ஆண்டனி படம் தவிர கடந்த சில ஆண்டுகளாக தோல்வியைச் சந்தித்து வந்த விஷாலுக்கு இந்தப் படம் தேவையான வெற்றியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தனக்கு காதல் திருமணம் என அறிவித்திருந்தார். இதனையடுத்து பெண் யாராக இருக்கும் என்ற பல எதிர்பார்ப்புகள் இருந்தது. பலரும் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வந்தனர். அதற்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கிறது.

விஷாலுடன் காதல் – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா

 

பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சாய் தன்ஷிகா தான் விஷாலை காதலிப்பதாகவும் இருவருக்கும் ஆகஸ்ட் 29, 2025 அன்று நடைபெறவிருப்பதையும் மேடையில் அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் நடித்துள்ள யோகிடா பட விழாவில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

மேடையில் பேசிய சாய் தன்ஷிகா, ”நடிகர் விஷால் நடிப்பி் பொங்கலை முன்னிட்டு இந்த மேடையை திருமணத்தை அறிவிக்கும் ஒரு மேடையாக நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாடியே விஷாலிடம் தயவுசெய்து நாம் இருவரும் நண்பர்கள். அப்படியே வெளியில் காட்டிக்கலாம் அப்படினு சொல்லியிருந்தேன். ஆனால் காலையில் ஒரு செய்தி பார்த்தேன். இதன் பிறகு மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம்” என்று பேசினார்.

சாய் தன்ஷிகாவுடனான காதல் குறித்து விஷால்


அதனைத் தொடர்ந்து பேசிய விஷால் எங்களுக்கு கல்யாணம் முடிவாகிவிட்டது. பொண்ணும் கிடைச்சிட்டாங்க. அவரோட அப்பாவும் இருக்காங்க. அவரின் அனுமதியுடன் பெயரை சொல்கிறேன். அந்த பொண்ணு வேற யாரும் இல்லை. தன்ஷிகா தான். நான் அவரை திருமணம் செய்யவிருக்கிறேன். நாங்க வடிவேலு, கோவை சரளா மாறி இருக்க மாட்டோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார். இதனையடுத்து விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.