Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalapathy Vijay : ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்.. இவ்வளவு கோடியா?

Jana Nayagan Movie Update : தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் ஜன நாயகன். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமானது சுமார் ரூ.90 கோடிகளைக் கொடுத்து தமிழகத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றுள்ளது.

Thalapathy Vijay : ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்.. இவ்வளவு கோடியா?
ஜன நாயகன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 21 Apr 2025 18:38 PM

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இறுதியில் வெளியான கோட் (GOAT) படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் (Vijay) நடித்து வரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான இதனை, அஜித்தின் துணிவு படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் எச்.வினோத் (H.Vinoth) இயக்கி வருகிறார். இந்த படமானது முற்றிலும் அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்சன் (KVN Production) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் அவரின் இறுதி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் தற்போது இப்படத்தின் பாடல்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனமானது தயாரித்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் என்ற பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனமானது சுமார் ரூ.90 கோடிகளைக் கொடுத்து இப்படத்தின் உரிமையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக விலைக்குத் தமிழக உரிமை விற்கப்பட்ட படம் ஜன நாயகன் என்று கூறப்படுகிறது. இந்த தகவலானது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான, ஜன நாயகனில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் சாரின் கடைசி படத்தில் நான் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக அனிமல் படத்தில் நடித்திருந்த பாபி தியோல் நடித்து வருகிறார். இவர் இறுதியாகத் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நடிகர்கள் நரேன், ஸ்ருதி ஹாசன், பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜூ, டீஜே அருணாச்சலம், பிரகாஷ் ராஜ், ரெபா மோனிகா ஜான் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகளானது சென்னையில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2025ம் மே அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நிறைவடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு, மக்களிடையே சிறப்பான ஓபனிங் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி...
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்......
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!...
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?...