Anikha Surendran: பட்டதாரியான அனிகா சுரேந்திரன்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்! | TV9 Tamil News

Anikha Surendran: பட்டதாரியான அனிகா சுரேந்திரன்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

Updated On: 

02 May 2026 19:19 PM

 IST

Anikha Surendran Graduates: மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து, பட்டதாரியாக ஆனதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

1 / 5மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த அனிகா சுரேந்திரன், தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடித்த திரைப்படம்தான் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக இவர் நடித்திருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தொடர்ந்து அஜித்தின் விஸ்வசம் படத்தில் அவரின் மகளாக நடித்து மேலும் வரவேற்கப்பட்டார்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த அனிகா சுரேந்திரன், தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடித்த திரைப்படம்தான் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக இவர் நடித்திருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தொடர்ந்து அஜித்தின் விஸ்வசம் படத்தில் அவரின் மகளாக நடித்து மேலும் வரவேற்கப்பட்டார்.

2 / 5

இவ்வாறு பிரபல நடிகர்களின் மகளாக பல படங்களில் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கதாநாயகியாக அறிமுகமான படம்தான் ஹோ மாய் டார்லிங். இப்படத்தில் பல விமர்சனங்களை இவர் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் மிக முக்கியமான வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

3 / 5

இவர் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தனுஷ் இயக்க, அறிமுக நடிகர் பவிஷ் நாராயண் என்பவருக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது.

4 / 5

சினிமா ஒருபுறம் இருந்தாலும், பள்ளி படிப்பை தொடர்ந்து தனது கல்லூரி படிப்பிலும் அனிகா சுரேந்திரன் தீவிரமாக படித்துவந்தார். இவர் கேரளாவில் பிரபல கல்லூரியில் பத்திரிக்கை துறை (Journalism) படித்துவந்த நிலையில், தற்போது அந்த படிப்பை முடித்து பட்டதாரியாக மாறியுள்ளார் (Graduate).

5 / 5

நடிகர் அனிகா சுரேந்திரன் சினிமாவில் இருந்தபோதும் தனது கல்லூரி படிப்பில் உறுதியாக இருந்த நிலையில், கல்லூரியில் பத்திரிக்கை துறை பட்டதாரியாக மாறியுள்ளார். தற்போது இவருக்கு பிரபலங்கள் உட்பட பல்வேறு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us
Related Stories
தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான் – சுந்தர் சி ஓபன் டாக்
நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் பட ஷூட்டிங் நிறைவு – வைரலாகும் பதிவு!
ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ
நெல்சனின் முதல் படம் பாதியிலேயே நின்னுடுச்சு… ஆனா இப்போ – நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி
karuppu: பட்டாச கொளுத்துங்கடா.. சூர்யாவின் கருப்பு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
RJ Balaji: அட்லீயின் ராஜா ராணி படத்தை நான் கலாய்த்திருக்கிறேன்.. ஆனால் அவர் இப்போது – ஆர்.ஜே.பாலாஜி!