ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்
நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து போ. பிடிவாதமாக இருக்கும் ஒரு சிறுவனும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தையும் ஒரு பயணத்தின் போது சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்வதை மையமாக வைத்து இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது.

பறந்து போ
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சில இயக்குநர்களின் ஒருவர் இயக்குநர் ராம் (Director Ram). மனிதர்களின் வாழ்வியலை இயல்பாக படமாக்க கூடியவர். இவர் கடந்த் 2007-ம் ஆண்டு நடிகர் ஜீவாவை (Actor Jiiva) வைத்து கற்றது தமிழ் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் ராம். உலகமயமாக்கலுக்கு பிறகு தமிழ் படித்த ஒருவர் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் அதனால் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம், சிறு வயது காதல் என்று ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடிக்கும் நிகழ்வுகளை மிகவும் இயல்பாக காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குநர் ராம். இந்தப் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியான பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் 2013-ம் ஆண்டு தங்க மீன்கள் என்ற படத்தை இயக்கினார். இதில அவரே நடிக்கவும் செய்திருந்தார். படிப்பில் கவனம் செலுத்த முடியால் தவிக்கும் சுட்டிக் குழந்தையின் தந்தையாக இந்தப் படத்தில் நடித்திருப்பார். இந்த போட்டி உலகில் ஒவ்வொருவரும் மற்றொருவரைப் பார்த்து எப்படி எல்லாம் மாறுகிறார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார்.
அப்பா – மகள் பாசத்தை கொண்டு வெளியான இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியார் நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக ஆனந்த யாழை பாடலை தமிழகத்தில் உள்ள அனைத்து அப்பா – மகள்களும் கொண்டாடித் தீர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதியாக இவரது இயக்கத்தில் 2019-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பிறகு நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தை உலக அளில் உள்ள சர்வதேச பட விழாக்களில் திரையிட்டு வருகிறார். மேலும் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிர்ச்சி சிவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
July 4th. Let’s Fly Away. @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @eka_dop @edit_mathi @DhayaSandy @madhankarky @silvastunt @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia @JioHotstar @gksbroscompany @SureshChandraa#ParanthuPo #FlyAway #July4 #theaters #DirectorRam pic.twitter.com/3TE1EaPaXG
— Shiva (@actorshiva) May 12, 2025
முன்னதாக படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பறந்து போ படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது.