Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோஸ்!

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் தற்போது கேரளாவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோஸ்!
ஜெயிலர் 2Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 May 2025 17:58 PM

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். முன்னதாக கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி நடந்தது. இந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது. அதில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோவை ஜனவரி மாதம் படக்குழு வெளியிட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மாஸான ஆக்‌ஷன் காட்சியில் நடித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடித் தீர்த்திருந்தாலும் பலரும் இந்த வீடியோ ஃபேக் என்றும் டூப் போட்டு செய்துள்ளார்கள் என்றும் ட்ரோல் செய்தனர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழு சிறிது நாட்களிலேயே அந்த அறிமுக வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

அதில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்துள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 74 – வயது ஆகியும் தனது சினிமா வாழ்க்கைக்கு ப்ரேக் கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாக ஒரு மனிதர் வாழ்நாளில் ஓய்வு எடுக்கும் வயதிலும் ஓயாமல் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தற்போது வரை எந்த நடிகராலும் அவரிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து படங்களில் நடிக்கும் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாக படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது.

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள்:

இந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். மேலும் 20 நாட்களுக்கு இந்தப் படப்பிடிப்பு நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள சென்ற போது அவருக்கு ஜெயிலர் படத்தில் வெளியான ஹுக்கும் பாடலைப் போட்டு படக்குழுவினர் வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...