Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

M Sasikumar : இந்த படம் எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு.. டூரிஸ்ட் பேமிலி வெற்றி விழாவில் உணர்ச்சிவசப்பட்ட சசிகுமார்!

M Sasikumars Emotional Speech : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, இயக்கியும் ஹிட் கொடுத்தவர் சசிகுமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் வெளியான இந்த படமும் மக்களின் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் வெற்றிவிழா நடந்த நிலையில், அந்த மேடையில் நடிகர் சசிகுமார் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.

M Sasikumar : இந்த படம் எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு.. டூரிஸ்ட் பேமிலி வெற்றி விழாவில் உணர்ச்சிவசப்பட்ட சசிகுமார்!
எம் சசிகுமார்
barath-murugan
Barath Murugan | Published: 13 May 2025 17:27 PM

இயக்குநராக சினிமாவில் அறிமுகமானவர் எம். சசிகுமார் (M. Sasikumar) . ஆரம்பத்தில் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி பின், 2008ம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம்  (Subramaniapuram) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth)  இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் (Simran) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.

இதில் நடிகர் சசிகுமார் உடன் நடிகர்கள் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ் பாஸ்கர், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஒரு இலங்கையைச் சேர்ந்த குடும்பம் கடல் வழியாக தப்பித்து, தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனர். அவர்களின் குடும்பம் இங்கு எவ்வாறு பல சவால்களைச் சமாளிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாகும்.

இந்த படமானது காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகிப் பல கோடி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மேடையில் சசிகுமார், உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருந்தார். மேலும் குட்டிபுலி மற்றும் சுந்தரபாண்டியன் படத்தைவிடவும் இந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளதாக பேசியிருக்கிறார்.

நடிகர் சசிகுமார் உணர்ச்சிகரமாகப் பேசிய விஷயம்

அந்த நிகழ்ச்சி மேடையில் நடிகர் சசிகுமார், இந்த படத்தைப் பார்த்துவிட்டு பலரும் என்னிடம் கேட்ட விஷயம் உங்களின் சம்பளத்தை ஏத்திவிடுவீர்களா என்று, ஆனால் நான் சம்பளத்தை ஏற்றப்போவதில்லை .அது அப்படியேதான் இருக்கும். மேலும் நான் சம்பளத்தை உயர்த்தினால் படத்தின் தரமும் குறையும் அதன் காரணமாக நான் சம்பளத்தை ஏற்றுவதில்லை. மேலும் எனக்கு பல ஆண்டுகளுக்குப் பின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலமாக வெற்றி கிடைத்திருக்கிறது. அதுதான் உண்மை. அவ்வளவு பெரிய வெற்றியும், வரவேற்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை நான் எனது வெற்றியாகவோ அல்லது இயக்குநரின் வெற்றியாகவோ பார்க்கவில்லை.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இனிமேல், புது இயக்குநர்களுக்கு, வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தோல்வியடைந்த இயக்குநர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்த படம். மேலும் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கையைத்தான் இந்த படத்தின் மூலம் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக நம்பிக்கையோடு காத்திருந்தால் வெற்றி நிச்சயம், மேலும் நாம் தோல்வியை ஒத்துக்கொள்ளவேண்டும்.

நானும் பல படங்களில் தோல்வியடைந்திருக்கிறேன், அதை நானும் ஒத்துக்கொண்டிருக்கிறேன். மேலும் எனது படங்களிலேயே அதிகம் வசூல் செய்துள்ள படமாகவும் இந்த டூரிஸ்ட் பேமிலி படம் இருக்கிறது. குட்டிப்புலி மற்றும் சுந்தரபாண்டியன் படத்தை விடவும் அதிகம் வசூல் செய்து வெற்றி பெற்றிருக்கிறது என்று இயக்குநரும், நடிகருமான சசிகுமார் மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...