அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் எப்போ தெரியுமா? அப்டேட் இதோ
AA22 x A6: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை கடந்த ஏப்ரல் மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜுன் - அட்லி
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun). இவர் கடந்த 1985-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடந்து 2003-ம் ஆண்டு இயக்குநர் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரது தந்தை அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய தயரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சில படங்கள் தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பையும் பெறத் தொடங்கியது. குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் திருவிக்ரம் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆலா வைகுந்தபுரமுலூ.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் ஜெயராம், தபு, சுஷாந்த், நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, சச்சின் கெடேகர், சமுத்திரக்கனி, நவ்தீப், சுனில், ஹர்ஷ வர்தன், மற்றும் கோவிந்த் பத்மசூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுனை தென்னிந்திய மொழிகளில் அதிகம் கவனிக்க வைத்த முதல் படம் ஆலா வைகுந்தபிரமுலூ தான். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை பான் இந்திய அளவில் பிரலம் ஆக்கியது புஷ்பா படம் ஆகும் 2021-ம் ஆண்டு இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்தப் படம் புஷ்பா. சாதாரண செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளியான புஷ்பா எப்படி கேங்ஸ்டராக மாறினார் என்பது முதல் பாகம்.
அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு வீடியோ:
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு புஷ்பா படத்தி இரண்டாவது பாகம் வெளியானது அதில் கேங்ஸ்டராகவும் கடத்தல் காரணாகவும் இருக்கும் புஷ்பா எப்படி அந்த நாட்டையை ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார். இதன் காரணமாக பல பிரச்னைகள் ஏற்படுது அதனை எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தில் இரண்டாவது பாகம்.
இந்தப் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் தனது 22-வது படத்திற்காக அட்லியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஷூட்டிங் மாதம் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.