நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன? பிரபல தெலுங்கு இயக்குநர் விளக்கம்
இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஜயின் 69-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி விஜயின் 69-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பதாகவும் இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் (Vijay) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் சிநேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மோகன், பிரசாந்த், பிரபு, அஜ்மல், பிரேம்ஜி, லைலா மற்றும் வைபவ் ஆகியியோரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மறைந்த பாடகியும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அக்காவுமான பாடகி பவதாரணியின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி இருந்தனர்.
மேலும் பாடலில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதுப் போலவே மகன் விஜயின் கதாப்பாத்திரத்திற்காக டீ ஏஜிங் என்ற தொழில்நுட்பத்தையும் படக்குழுவினர் இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். பிரபல ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் சார்பாக தாயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிட்டது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப் படத்திற்கு பிறது தனது 69-வது படம்தான் தான் நடிகராக நடிக்க உள்ள கடைசிப் படம் என்று நடிகர் விஜய் அறிவித்தது அவருடைய ரசிகர்கள் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
— Vijay (@actorvijay) March 24, 2025
அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்த நிலையில் படம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு படம் கைவிடப்பட்டது குறித்து பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மாலினேனி சமீபத்தில் பேசியுள்ளார். அதன்படி வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குநர் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தனது.
அதன்படி லியோ படத்திற்கு பிறகு விஜயின் 68-வது படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தொடங்காமல் நின்றுவிட்டது. இதுகுறித்து தற்போது தெலுங்கு ஒன் செய்திக்கு பேட்டியளித்த இயக்குநர் கோபிசந்த் பேசியதாவது, நான் ஒரு கதையை தயார் செய்து விஜய் சாரிடம் கூறினேன். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஸ்கிரிப்ட்டுக்கு ஓகே சொல்லிவிட்டார்.
நாங்கள் படத்தை அறிவிக்கத் திட்டமிட்டிருந்த நேரத்தில் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயை சுற்றியுள்ள அவருக்கு நெருக்கமான சிலர் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி வைக்காமல் தமிழ் இயக்குநருடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினர். இதன் காரணமாகவே எங்களது கூட்டணி முறிந்தது என்று கோபிசந்த் மாலினேனி தெரிவித்துள்ளார்.