Hit 3 vs Retro : ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3? வெளியான அறிவிப்பு!
Hit 3 vs Retro Box Office Collection : டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி. இவரின் நடிப்பில் இறுதியாகத் திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் 3. இந்த படமானது சூர்யாவின் ரெட்ரோ படத்தை ஒட்டி கடந்த 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் நான்கு நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஹிட் 3 Vs ரெட்ரோ
நடிகர் நானியை (Nani) தெரியாத தென்னிந்திய ரசிகர்களே இருக்கமுடியாது. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் ஹிட் 3 (HIT 3). இந்த படமானது ஹிட் வழக்குகள் என்ற தொகுப்பில் உருவாகியுள்ளது. இதுவரை இந்த தொகுப்பிலிருந்து 3 பாகங்கள் வெளியாகியுள்ளது. அதில் மூன்றாவது பாகமான ஹிட் 3 படத்தில்தான் நடிகர் நானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சைலேஷ் கொளனு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த படத்ததை நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்திருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி , கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குறிப்பாக இந்தப் படத்தின் ரிலீஸின்போது நடிகர் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படமும் வெளியானது.
தெலுங்கில் நானியைப் போல சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல நடிகர். இந்த இரு பெரும் தூண்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்த படங்கள் ரிலீசாகி நான்கு நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை உலக அளவில் கலெக்ஷனில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
நானியின் ஹிட் 3 படமானது ரூ.101 கோடிகளை வசூல் செய்துள்ளது. மேலும் சூர்யாவின் ரெட்ரோ படமானது ரூ. 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் வசூலில் ஹிட் 3 படமானது ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியுள்ளது.
நடிகர் நானியின் ஹிட் 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
நடிகர் நானியின் ஹிட் 3 படமானது 4 நாட்களில், உலகளாவிய வசூலில் ரூ. 101 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நானியின் படங்களில் தொடக்கத்திலே அதிகம் வசூல் செய்து ரசிகர்களைக் கவர்ந்த படமாக ஹிட் 3 கருதப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், விது மற்றும் நாசர் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது 80 காலகட்டத்தில் நடக்கும் மாறுபட்ட கதைக்களத்துடன் அமைத்திருந்தது. மேலும் இந்த படமானது முற்றிலும் காதல் சார்ந்த ஆக்ஷ்ன் படமாக அமைந்திருந்தது.
இந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் ஜோடி மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். நடிகர் சூர்யா இந்த படத்தில் காதலுக்காக எதையும் செய்யத்துணியும் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமானது சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்து வருகிறது. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்புகளைப் பெற்று திரையரங்குகளில் சிறப்பாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.