தியேட்டரில் வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
Tourist Family OTT Update: நடிகர் சசிக்குமார் மற்றும் நடிகை சிம்ரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றிநடைப் போட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். நாயகியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர், யோகி பாபு, கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர். ரமேஷ் திலக், பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் பின்னணி இசைக்காகவும் ஷான் ரோல்டனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இலங்கையில் வாழ முடியாமல் குடும்பத்துடன் தமிழகத்தில் வந்து வாழ நினைக்கும் குடும்பட்த்தின் கதைதான் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதை என்ன?
இலங்கையில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக வருகிறார் சசிகுமார். அப்போது கடலோரத்தில் ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ரமேஷ் திலக்கின் கண்ணில் சிக்கிவிடுகின்றனர். மேலும் சசிகுமாரின் குடும்பத்தை அழைத்து செல்ல வந்த சிம்ரனின் அண்ணனான யோகி பாபுவும் போலீஸிடம் சிக்கிவிடுகிறார். இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார் ரமேஷ் திலக்.
அப்போது வேனில் சென்று கொண்டிருக்கும் போது சசிகுமாரின் இளைய மகன் கமலேஷ் ஒரு செண்டிமெண்ட் கதையை கூறுகிறார். அது ஒர்க்கவுட் ஆக போலீஸான ரமேஷ் திலக் சசிகுமாரின் குடும்பத்தை நான் உங்கள பாக்கல நீங்களும் என்ன பாக்கவில்லை என்று கூறி நடுவழியிலேயே விட்டுவிட்டு செல்கிறார்.
அதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் சசிகுமார். அப்போது அவரது தெருவில் இருக்கு எம்.எஸ்.பாஸ்கரிடம் கார் ட்ரைவராக வேலைக்கு சேர்ந்து குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்த்து வருகின்றனர். அந்த தெரு முழுவதும் இவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தெரிந்தும் அங்கு உள்ளவர்கள் அனைவரும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
அந்த தெருவில் உள்ள அனைவரிடமும் நடிகர் சசிகுமார் அன்புடன் நடந்துகொள்ளும் விதம் பிடித்துப்போய் அவரைக் கொண்டாடுகின்றனர் அக்கம் பக்கத்தினர். இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் தீடீரென ஒரு பதற்றமான சூழல் ஏற்படுகிறது. அது என்ன என்றால் இவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டபோது அங்கு ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கும்.
சிசிடிவி காட்சிகளை சோதித்த போது சசிக்குமார் அங்கு உள்ள குப்பை தொட்டியில் குப்பை போட்டிருப்பது அங்கு வெடிகுண்டு வைத்துவிட்டார் என்று போலீசாரை சந்தேக்க வைக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்களை தேடி போலீஸ் அதிகாரிகள் சென்னைக்கு வருகின்றனர். பிறகு சசிகுமாரின் குடும்பத்தை கண்டுபிடித்தனரா? அதன்பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி அப்டேட்:
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஹார்ட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தை இந்த மாத இறுதியில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.