தியேட்டரில் புகைப் பழக்கத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும் – அனுராக் காஷ்யப்

Director Anurag Kashyap: திரைப்பட இயக்குநர், நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் திரைப்படம் பார்க்கும் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் வருவது படத்தின் அனுபவத்தை எவ்வாறு சீர்குலைக்கிறார் என்பது குறித்து தனது கவலையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தியேட்டரில் புகைப் பழக்கத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும் - அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

Published: 

01 May 2025 20:12 PM

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நடிகராக அறிமுகம் ஆனார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் லியோ, மகாராஜா, விடுதலை பாகம் 2 படங்களில் நடித்தார். இதில் மகாராஜா படத்தில் நடிகர் அனுராக் காஷ்யப்பின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அனுராக் காஷ்யப் தமிழில் ஒன் 2 ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் விரைவில் படத்தை இயக்க உள்ளதாகவும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இண்டிவயர் (Indiewire) உடனான ஒரு நேர்காணலில் இந்திய சினிமாக்களில் உள்ள டிஸ்கிளைமர்கள் குறித்து அனுராக் காஷ்பய் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது கூறினார், சின்னர்ஸ் (Sinners) போன்ற மனநிலைப் படைப்பில், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற இந்த டிஸ்கிளைமர்கள், திரைப்படத் இயக்குநர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய ஆழ்ந்த அனுபவத்திலிருந்து பார்வையாளர்களை வெளியேற்றி, மனநிலையையும் செயல்பாட்டில் உள்ள கட்டமைப்பையும் கொன்றுவிடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான தனது அக்லி திரைப்படத்தில் இந்த மறுப்புகளை தக்கவைத்துக் கொண்டதற்காக சென்சார் வாரியத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது குறித்து அனுராக் காஷ்யப் கூறுகையில், இது கலை வெளிப்பாட்டிற்கு அடிப்படையான அச்சுறுத்தல் என்று நான் வாதிட்டேன்.

வழக்கு நீண்டு கொண்டே போனது, இறுதியில், எங்கள் படம் திருடப்பட்ட பிறகு, சண்டையை கைவிட்டு அதை வெளியிட வேண்டியிருந்தது. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் காட்சிகள், இசை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தி பார்வையாளர்கள் மூழ்குவதற்கு ஏதாவது ஒன்றை உருவாக்குகிறார். அவர்கள் அந்த உலகத்திற்குள் நுழைவதற்கு முன்பே, ஒரு அதிர்ச்சியூட்டும் விளம்பரம் அனுபவத்தை அழித்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும், சட்டமியற்றுபவர்கள் அழகியல் பற்றி அக்கறை காட்டாததால் எதுவும் மாறவில்லை என்று இயக்குனர் அனுராக் காஷ்யப் தொடர்ந்து கூறினார். ஏப்ரல்  மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று, மைக்கேல் பி. ஜோர்டான் நடித்த ரியான் கூக்லரின் அதிரடி – திகில் படமான சின்னர்ஸ் இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இருவரும் இந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இது தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.