தக் லைஃப் பட டிரெய்லரில் இந்த டிவிஸ்ட்டை நோட் பண்ணீங்களா? – படத்தின் கதை இதுவா?
Kamal Haasan - Mani Ratnam Thug Life Trailer : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் டிரெய்லர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் கதை குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

தக் லைஃப் டிரெய்லரில் கமல்ஹாசன் - திரிஷா - சிம்பு
மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) நடித்துள்ள தக் லைஃப் (Thug Life) படத்தின் டிரெய்லர் மே 17, 2025 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகன் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் இணைந்துள்ள படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதற்கேற்ப தக் லைப் படத்தின் டைட்டில் டீச்சர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்திருந்தது. இந்தப் படம் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு கமல்ஹாசன் கூறிய அடிப்படைக் கதையை வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை மணிரத்னம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது வெளியான டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியருக்கிறது. இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் கமல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
டிரெய்லரில் மிகப்பெரிய ட்விஸ்ட்
everyone was waiting for str x trisha pair-up. mani ratnam had other plans! pic.twitter.com/mcMtk6RTmZ
— Films and Stuffs (@filmsandstuffs) May 17, 2025
தற்போது வெளியான டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்பரைஸாக அமைந்திருக்கிறது. காரணம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு வரை இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அபிராமியும், சிம்புவுக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருப்பதாக அனைவரும் கருதினர். மேலும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு சிம்பு – திரிஷா ஜோடியைத் திரையில் காணவுள்ளதாக அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு தக் லைஃப் டிரெய்லர மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த டிரெய்லரில் கமல் – அபிராமி, கமல் – திரிஷா ஆகியோரின் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து சிம்பு – திரிஷாவுக்கு ஜோடி இல்லையா என தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்களது ரியாக்சனை மீம்ஸாக வெளியிட்டு வருகின்றனர்.
தக் லைஃப் படத்தின் கதை இதுவா?
தக் லைஃப் படத்தின் டிரெய்லரை வைத்து அதன் கதையை யூகிக்க முடிகிறது. ஆனால் டிரெய்லரில் காண்பித்தது இல்லாமல் படத்தில் டிவிஸ்ட் இருக்கலாம். இருப்பினும் டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது நாயகனின் தொடர்ச்சியாக மும்பையில் பெரிய டானாக கமல் இருக்கிறார். அவர் இடத்தை பிடிக்க பெரும் போட்டி நடக்கிறது. நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கமலின் இடத்தை பிடிக்க பெரும் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் கமல் சிம்புவை முன்னிலைப்படுத்துகிறார். இதனால் உணடாகும் பிரச்னையில் கமல் – சிம்பு இருவருக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த அதிகாரப் போட்டியில் கடைசியில் யார் வென்றார்கள் என்பது படத்தின் கதையாக இருக்கலாம். ஆனால் டிரெய்லரில் காண்பித்தது மட்டும் கதையாக இருக்காது. படத்தில் நிச்சயம் மணிரத்னம் சர்ப்பரைஸ் வைத்திருப்பார்.