Suriya 46 : ‘சூர்யாவின் 46வது’ படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ!

Suriya And Mamitha Baiju : தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். கிட்டத்தட்டத் தமிழில் மட்டுமே மாமிதா பைஜூ 4 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

Suriya 46 : சூர்யாவின் 46வது படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ!

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜூ

Published: 

19 May 2025 16:23 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியுடன் (RJ Balaji) சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாகத் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா 46வது  (Suriya46) படத்தில் இணைந்துள்ளார். இது குறித்தான அறிவிப்பை நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் இன்று 2025, மே 19ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இந்த படத்தின் பூஜையில் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri), ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash), நாகவம்சி மற்றும் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) எனப் பலரும் கலந்துகொண்டனர். சூர்யாவின் 46வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படத்தில் அவருக்கு இணையாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் 46வது பூஜை பதிவு :

நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து, இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே . பாலாஜியின் சூர்யா 45வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா, வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்தது வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதைத் தொடர்ந்துதான் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டர்டைமென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், தனது 46வது படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழில் தனுஷின் வாத்தி படத்தை இயக்கி பிரபலமானார். இதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் இறுதியாக லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி போன்ற பிரபலங்களில் நடிப்பில் வெளியாகியது. இதைத் தொடர்ந்துதான் நடிகர் சூரியாவின் 46வது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.