மோகன்லால் – சோபனாவின் துடரும் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
Thudarum Movie Release Update: நடிகர்கள் மோகன்லால் மற்றும் சோபனாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படமான துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இறுதியாக அறிவித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

மோகன்லால் - சோபனா
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohanlal) நடிப்பில் உருவாகியுள்ள ‘துடரும்’ (Thudarum) படத்தின் வெளியீட்டு தேதியை இறுதியாக அறிவித்துள்ளார். கே.ஆர். சுனிலுடன் இணைந்து திரைக்கதை எழுதிய தருண் மூர்த்தி இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இதுகுறித்து நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிகை சோபனா (Actress Shobana) நடித்துள்ளார். சுமார் 15 வருடங்களுக்கு பிறகு நடிகர்கள் மோகன்லால் மற்றும் சோபனா இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் மோகன்லால் படம் குறித்து வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
அந்த பதிவில் நடிகர் மோகன்லால் கூறியதாவது, நீங்கள் கிசுகிசுப்புகளைக் கேட்டிருக்கிறீர்கள்.
எங்கள் வருகையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதை வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் நேரம் இது.
ஏப்ரல் 25 ஆம் தேதி துடரும் வருகிறது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
You’ve heard the whispers.
You’ve felt our arrival.
It’s time to drive it home.
Thudarum arrives on April 25th#ThudarumOnApril25
#Thudarum@Rejaputhra_VM @talk2tharun #Shobana #MRenjith #KRSunil #ShajiKumar @JxBe #AvantikaRenjith #L360 pic.twitter.com/ac8AzJFEWf— Mohanlal (@Mohanlal) April 7, 2025
இது தவிர, துடரும் படத்தின் ஒளிப்பதிவை ஷாஜி குமாரும், எடிட்டிங்கை நிஷாத் யூசுப் மற்றும் ஷஃபீக் விபியும், ஒலிப்பதிவை ஜேக்ஸ் பிஜோய் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் சோபனாவுடன் ஃபர்ஹான் பாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பப்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மோகன்லால் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘L2: எம்புரான்’ படத்திற்குப் பிறகு, ‘துடரும்ம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்ததன் மூலம் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மார்ச் மாதம் 26-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த ட்ரெய்லரில் நடிகர் மோகன்லால் தனது கார் மீது வைத்திருக்கும் அதீத அன்பை பார்க்க முடிந்தது. அந்த காரை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த வீடியோவின் மூலம் அறிய முடிந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.