Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம் – அப்டேட் இதோ

Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு மண்டேலா, பொம்மை நாயகி, போட் ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். இந்தப் படங்கள் மூன்றுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி மற்றும் நாயகன் என நடித்து வருகிறார் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம் – அப்டேட் இதோ
நடிகர் யோகி பாபுImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2025 07:41 AM

இயக்குநர் அமீர் (Director Ameer) இயக்கத்தில் 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் யோகி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் யோகி பாபு (Yogi Babu). இந்தப் படத்திற்கு முன்னதாக பல பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் நடித்த பிறகே யோகி பாபு என்று ரசிகர்கள் அழைக்கைத் தொடங்கினர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ந்து நடிகர்கள் ஜெயம் ரவி உடன் தில்லாலங்கடி, கார்த்தியுடன் பையா, நடிகர் விஜயுடன் வேலாயுதம், விமல் உடன் தூங்காநகரம், விக்ரம் உடன் ராஜபாட்டை, அட்டக்கத்தி, கலகலப்பு, பட்டத்து யானை, அரண்மனை, சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், மான் கராத்தே, சூது கவ்வும், என்னமோ ஏதோ,ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் யாமிருக்க பயமேன். ஹாரர் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற காமெடியில் நடித்ததன் மூலம் நடிகர் யோகி பாபு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் யோகி பாபு. பின்பு நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவைப்ப் பெற்றார்.

ரெமோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸ் மாதிரி கீர்த்தி சுரேஷை ஏமாற்ற நடிப்பார். அந்த நர்ஸை காதலிக்கும் நபராக கலகலப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் யோகி பாபு. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார் நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், அஜித் குமார், ஆர்யா, விஷால் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தர்மபிரபு படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து காமெடி படங்களில் மட்டும் இன்றி கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இவரது நடிப்பில் தற்போது கோலிவுட்டில் படங்கள் தொடர்ந்து வெளியகி வருகிறது. அந்த வகையில் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பொம்மை நாயகி படத்தின் இயக்குநர் ஷான் இயக்கத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் யோகி பாபு. இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக உள்ள ஒரு உண்மை சம்பவத்தின் கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!...
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்......
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!...
பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம் - 3 வீரர்கள் பலி!
பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம் - 3 வீரர்கள் பலி!...