ரெட்ரோ படத்திலிருந்து கனிமா பாடலின் தியேட்டர் வெர்ஷன் இதோ!
Actor Suriyas Retro Movie: நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வரும் படம் ரெட்ரோ. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே கனிமா பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் பாடலின் தியேட்டர் வெர்ஷன் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா (Actor Suriyas ) கங்குவா படத்தைத் தொடர்ந்து தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி இந்தப் படத்திற்காககவே முதன்முறை அமைந்தது. நடிகர் சூர்யாவின் 44-வது படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டது. முன்னதாக படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சூர்யா படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் விதமாக இருந்தது. அதனை தொடர்ந்து படங்களின் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து. மேலும் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே படக்குழு படத்தில் இருந்து பாடல்களின் லிரிக்கள் வீடியோக்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் கண்ணாடிப்பூவே பாடலின் லிரிக்கள் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே வெளியானது. தலையில் நிறைய முடி ஃபங் என சூர்யா வித்யாசமான ஸ்டைலில் தோன்றினார்.
லிரிக்கள் வீடியோ என்பதால் அங்கு அங்கு சூர்யாவின் நடனக் காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. மேலும் காதலியை விட்டு பிரிந்து ஜெயிலில் தண்டனைக் கைதியாக இருக்கும் சூர்யா அந்தப் பாடலைப் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல் காதல் தோல்வி அடைந்தவர்களுக்கும், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறியது. படத்தின் பார்வைகளும் யூடியூபில் மில்லியன் கணக்கை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் இசையில் அவரே பாடிய பாடல் கனிமா. இந்தப் பாடலின் லிரிக்கள் வீடியோ முன்பே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் பாடலின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் தொடர்ந்து ரீ கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here is the #Kanimaa Alternate Version. A Small peek into @Music_Santhosh ‘s #KanimaaAlt Version 🙂#Retro#LoveLaughterWar #RetroBlockbuster #TheOneWon pic.twitter.com/xI91CdNNNT
— karthik subbaraj (@karthiksubbaraj) May 4, 2025
படத்தில் இந்தப் பாடல் நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் திருமணத்தை முன்னிட்டு பாடப்படும் பாடலாக இருந்தது. இதில் நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து மொத்த குடும்பமும் நடனம் ஆடுவது அந்த காட்சியில் தெரியும். இந்த நிலையில் திரையரங்குகளில் ஒளிபரப்பான கனிமா பாடலின் காட்சிகளை தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.