Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Weather Forecast: அடுத்த சில மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்திற்கு மாறாக கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Weather Forecast: அடுத்த சில மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
மழை அப்டேட்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 May 2025 07:25 AM

சென்னை, மே 5: தமிழ்நாட்டில் நேற்று அதாவது 2025 மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram) தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் இன்னும் வெயில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், மழையானது பெய்து பல்வேறு இடத்தில் குளிர்வித்தது. தலைநகர் சென்னை (Chennai) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று (05.05.2025) 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடையில் மழை ஏன்..?

தென்னிந்திய பகுதிகளின் மேலும், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் மேற்கு திசை மற்றும் கிழக்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் இன்று அதாவது 2025 மே 5ம் தேதியான இன்று கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 அடுத்த சில தினங்களுக்கான மழை அப்டேட்:

தமிழ்நாட்டில் நாளை (06-05-2025) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (07-05-2025) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2025 மே 8ம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 09-05-2025 மற்றும் 10-05-2025 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிக்குமா..?

2025 மே 5ம் தேதியான இன்று முதல் 2025 மே 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும், எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!...
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்......
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!...
பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம் - 3 வீரர்கள் பலி!
பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம் - 3 வீரர்கள் பலி!...