Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பட்ஜெட் விளக்க கூட்டம்.. படாரென விழுந்த மின்விளக்கு கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா!

A. Raja Escapes Injury: மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில், பலத்த காற்று காரணமாக விளக்கு கம்பம் சாய்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். அதேநேரம், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களை ஆ.ராசா சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். கடற்கொள்ளையர் தாக்குதல் குறித்தும், பட்ஜெட் விளக்கக் கூட்டம் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தார்.

பட்ஜெட் விளக்க கூட்டம்.. படாரென விழுந்த மின்விளக்கு கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா!
ஆ.ராசா தப்பிய புகைப்படம்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 05 May 2025 09:13 AM

மயிலாடுதுறை, மே 5: தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2024 ஏப்ரம் மாதம் தமிழ்நாட்டிற்கான பொது பட்ஜெட் (Tamil Nadu Budget 2025 – 26) மற்றும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உள்ளிட்டவை சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக மயிலாடுதுறை நகர திமுக சார்பில் சின்ன கரை வீதி பகுதியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா (Andimuthu Raja) பங்கேற்று உரையாற்றினார். அப்போது, எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசியபோது மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுடன் கூடிய கம்பம் திடீரென்று சாய்ந்தது.

உயிர்தப்பிய ஆ.ராசா:

நன்றாக நின்றுகொண்டு வெளிச்சம் தந்து கொண்டிருந்த மின்விளக்கு கம்பம், சரியாக அதன் அருகில் இருந்த மேடை பகுதியில் நின்று மைக்கில் பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சாய தொடங்கியது. இதை பார்த்து உஷாராகி கொண்ட ஆ.ராசா சற்று தள்ளி தனது இடப்புறம் நகர்ந்தார். அப்போது சரியான அந்த மின்விளக்கு கம்பம் ஆ.ராசா பேசிக்கொண்டிருந்த மைக் போடியத்தின் மீது விழுந்தது. இதனால், திமுக எம்பியான ஆ.ராசா காயம் ஏதுமின்றி நூலிழையில் உயிர் தப்பினார்.

உடனடியாக அங்கு நடந்துகொண்டிருந்த பட்ஜெட் விளக்கக் கூட்டம் நிறுத்தப்பட்டு அ.ராசா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றது. அதேநேரத்தில், பலத்த காற்றுடன் மழையும் வெளுத்து வாங்கியதால் அங்கு கூடியிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் களைந்து சென்றனர். இத்துடன் கூட்டம் நடைபெற்ற பகுதியில் பலத்த காற்று மற்றும் மழையும் பெய்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

ஆ.ராசா சரியான நேரத்தில் விலகிய காட்சி:

முன்னதாக, நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி, அவர்கள் வைத்திருந்த வலை உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கொள்ளை அடித்து சென்றனர். இதனை தொடர்ந்து, இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா நேற்று (04.05.2025) காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண பணிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீன்வர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம்.

காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் இன்னும் சில நாட்களில் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார்கள். இந்த சந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட மீனவர்கள், தங்களது மனகுமுறல்களையும் என்னிடம் தெரிவித்தார்கள். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துசென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம், பிரதமரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!...
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!...
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி - பாஜக கண்டனம்!...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்...
நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம்......
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!...