அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார்… தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து நடிகர் யோகி பாபு பேச்சு
Actor Yogi Babu: தமிழ் சினிமாவில் சாதிப்பதற்உ உருவம் முக்கியம் இல்லை திறமை தான் முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிலர் உள்ளனர். அதில் யோகி பாபுவும் ஒருவர் என்று கூறலாம். சமீபத்தில் பட விழா ஒன்றில் தன்னை விமர்சித்தவரக்ள் குறித்து நடிகர் யோகி பாபு பேசியது தற்போது கவனம் பெற்று வருகின்றது.

யோகி பாபு
இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu). இந்தப் படத்தில் நடித்ததற்காகவே இவரை ரசிகர்கள் யோகி பாபு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் யோகி பாபுவை பிரபலமாக்கியது 2014-ம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமே படம் தான். இயக்குநர் டிகே இயக்கத்தில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஓவியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படதில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கருணாகரன், மயில்சாமி மற்றும் யோகிபாபு என பலர் நடித்டிருந்தனர். திகில் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவின் பன்னி மூஞ்சி வாயா காமெடி அவரை தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்க வைத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான பல படங்களில் அவரது இயல்பான காமெடியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரவி மோகன், பிரபுதேவா, சிலம்பரசன் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த யோகி பாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடித்த மண்டேலா, தர்மபிரபு, பொம்மை நாயகி ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்த்டக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிகர்கள் சசிக்குமார் மற்றும் சிம்ரனின் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் அந்தப் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் நடைப்பெற்ற கஜானா பட விழாவில் நடிகர் யோகி பாபுவை விமர்சித்து தயாரிப்பாளர் பேசியது சினிமா வட்டாரங்களில் வைரலானது. இதுகுறித்து தற்போது யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு பட விழாவில் நான் பங்கேற்கவில்லை என்று யார் யாரோ என்னென்னமோ பேசுறாங்க.
எனக்கு உதவியாளராக இருந்த ஒருவர் படம் இயக்குகிறார் என்று அவர் கேட்டுக்கொண்டதற்பாக ஒரு இரண்டு நாள் சென்று படத்தில் நடித்துக்கொடுத்தேன். அந்த படத்தின் விழாவிற்கு செல்லவில்லை. விழாவிற்கு வர காசு கேட்டென் என்றெல்லாம் கூறுகிறார்கள். எனக்கு எத்தனை பேர் சம்பள பாக்கி வைத்துள்ளார்கள் தெரியுமா என்று மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார் யோகி பாபு.
நடிகர் யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Mystery has a new face.
Watch out the teaser of #JoraKaiyaThattu
🔗 https://t.co/J8slVrOTl8@Zakir_ali1414 @WAMAENTERTAIN
#GSaravana @FilmSaravana #VineeshMillennium @theVcreations @KalaippuliAudioWorld wide release on May 16th pic.twitter.com/aafmGM5Z8w
— Yogi Babu (@iYogiBabu) May 6, 2025
நடிகர் யோகி பாபு நடிப்பில் தற்போது ஜோரா கைய தட்டுங்க படம் உருவாகியுள்ளது. இந்தப படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அன்றே நடிகர் சூரியின் மாமன் மற்றும் நடிகர் சந்தானத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.