Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : ‘நான் அந்த நடிகையைத்தான் கடத்துவேன் ‘ நடிகர் விஜய் சேதுபதி ஜாலி டாக்!

Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாகப் படங்களில் நடித்து வெற்றி பெற்றுவருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நகைச்சுவையாக பேசிய விஷயம் வைரலாகி வருகிறது

Cinema Rewind : ‘நான் அந்த நடிகையைத்தான் கடத்துவேன் ‘ நடிகர் விஜய் சேதுபதி ஜாலி டாக்!
விஜய் சேதுபதி
barath-murugan
Barath Murugan | Published: 23 May 2025 07:41 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்திரம் ஹீரோ என அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்துகொண்டே வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை 2 (Viduthalai 2). இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது வரவேற்பு பெற்றார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் தயாராகிவருகிறது. அதில் ஒரு படம்தான் ஏஸ் (Ace). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 23ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார். மேலும் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தின் மூலம் தெலுங்கிலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி இன்ஸ்டா பதிவு

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பான் இந்திய நடிகர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். மேலும் இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவரைக் கடத்தி விடுவேன் என்று நகைச்சுவையாகப் பேசியிருந்தார். அதன் நடிகை வேறு யாருமில்லை நடிகை நயன்தாராதான்.

நடிகர் விஜய் சேதுபதி பேசிய விஷயம் :

முன்னதாக கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் சேதுபதியிடம் தொகுப்பாளர் ஒரு நடிகையைப் படத்தின் பாணியில் கடத்திக்கொண்டு போகவேண்டும் என்றா, இந்த நடிகையை கடத்துவீர்கள் ? என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதி”நான் நடிகை நயன்தாராவைக் கடத்திக் கொண்டுபோவேன். மேலும் தொகுப்பாளர் அப்படி என்றால் நயன்தாராவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதி “நான் கடத்திக்கொண்டு போவேன் என்று கூறுகிறேன் இதற்கும் மேலாக என்ன விளக்கம் வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி :

நடிகர் விஜய் சேதுபதியம் நயன்தாராவும் இணைந்து, காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நானும் ரவுடிதான் போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். அதிலும் நானும் ரவுடிதான் என்ற படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி மிகவும் அருமையாகவே இருந்தது என்று கூறலாம். இந்த இரு படங்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பகவானின் ஆசி.. இந்த 6 ராசிக்கு பண மழை தான்!
குரு பகவானின் ஆசி.. இந்த 6 ராசிக்கு பண மழை தான்!...
மைசூர் பாக் இனி மைசூர் ஸ்ரீ...அண்ணே ஒரு கிலோ மைசூர் ஸ்ரீ கொடுங்க!
மைசூர் பாக் இனி மைசூர் ஸ்ரீ...அண்ணே ஒரு கிலோ மைசூர் ஸ்ரீ கொடுங்க!...
ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ
ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ...
திருச்சி அரசு பொருட்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள்?
திருச்சி அரசு பொருட்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள்?...
சமூக ஊடகங்களில் அறிக்கையை வெளியிட ரவி மோகன், ஆர்த்தி ரவிக்கு தடை!
சமூக ஊடகங்களில் அறிக்கையை வெளியிட ரவி மோகன், ஆர்த்தி ரவிக்கு தடை!...
வீடு தேடி வரும் ரேஷன் கடை ஊழியர்கள் - அலைச்சல் மிச்சம்!
வீடு தேடி வரும் ரேஷன் கடை ஊழியர்கள் - அலைச்சல் மிச்சம்!...
பேருந்து ஓட்டுநரின் மரணம்: நடத்துநரின் செயலால் விபத்து தவிர்ப்பு!
பேருந்து ஓட்டுநரின் மரணம்: நடத்துநரின் செயலால் விபத்து தவிர்ப்பு!...
பஞ்சதந்திரம் படத்தில் நடந்த சுவாரஸ்யம்... தேவயானி ஓபன் டாக்
பஞ்சதந்திரம் படத்தில் நடந்த சுவாரஸ்யம்... தேவயானி ஓபன் டாக்...
கமல் ஐடியா.. மணிரத்னம் மேஜிக்.. தக் லைஃப் உருவான கதை!
கமல் ஐடியா.. மணிரத்னம் மேஜிக்.. தக் லைஃப் உருவான கதை!...
ராட்சத மலைப்பாம்புடன் Chill செய்யும் சிறுமி - வைரல் வீடியோ!
ராட்சத மலைப்பாம்புடன் Chill செய்யும் சிறுமி - வைரல் வீடியோ!...
கிழக்கு தொடர்ச்சி மலையில் 7 புதிய சுற்றுலா தலங்கள்: தமிழக அரசு
கிழக்கு தொடர்ச்சி மலையில் 7 புதிய சுற்றுலா தலங்கள்: தமிழக அரசு...