Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Update: “சாவா” படத்தின் ஓடிடி ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்!

Chhaava Movie OTT Release Update : பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் முன்னணி நடிப்பில் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சாவா. பான் இந்திய வெற்றி திரைப்படமான இப்படம் இதுவரை பல கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

OTT Update:  “சாவா” படத்தின் ஓடிடி ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்!
சாவா திரைப்படம்
barath-murugan
Barath Murugan | Published: 10 Apr 2025 11:25 AM

நடிகை ராஷ்மிகா மந்தனாவின்  (Rashmika Mandanna) புஷ்பா 2  (Pushpa 2)திரைப்படத்தை தொடர்ந்து பான் இந்திய திரைப்படமாக அமைந்தது சாவா (Chhaava) . வரலாற்று திரைக்கதைகளுடன் வெளியான இப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் (Vicky Kaushal) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த மாபெரும் திரைப்படத்தை பாலிவுட் பிரபல இயக்குனர் லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது மராத்திய புகழ் பெற்ற மன்னன் சிவாஜி மகாராஜின் மகன் சாம்பாஜியின் வீர வாழ்க்கையையும், முகலாய அரசின் எதிர்ப்பையும் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியான இப்படம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மராத்திய மொழி கதைக்களமாக இருந்தாலும் சாதித்து சினிமா ரசிகர்களையும் இந்த திரைப்படமானது ஈர்த்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா அனிமல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாலிவுட்டில் சாவா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மராத்திய ராணி சாம்பாஜியின் மனைவி யஷோபாய் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2025, பிப்ரவரி 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியது.

சாவா படத்தின் நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டு தேதி :

இந்த திரைப்படம்  திரையரங்குகளில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை செய்திருந்தது. இப்படத்தின் திரையரங்கு ரிலீஸை தொடர்ந்து எப்போது ஓடிடியில் வெளியாகிறது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தற்போது இணையதளங்களில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது . அதன்படி விக்கி கௌஷலின் சாவா படமானது வரும் 2025, ஏப்ரல் 11ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வசூல் சாதனை :

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விக்கி கௌஷலின் இந்த திரைப்படமானது சுமார் ரூ. 130 கோடி பட்ஜெட்டில் உருவாகியது. திரையரங்குகளில் வெளியான இப்படடம், இதுவரை சுமார் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படமானது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியான நிலையில், ஓடிடியில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அதை போல இந்த சாவா படமானது வரும் 2025, ஏப்ரல் 11ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த செய்தியானது தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படமானது ஓடிடியில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாம். திரையரங்குகளில் மக்களின் மனதை வென்ற சாவா திரைப்படம் ஓடிடியிலும் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில், ஹாரர் திரைப்படமான தாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், நடிகர் தனுஷுடன் குபேரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.