டூரிஸ்ட் ஃபேமிலி & ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா – வைரலாகும் போஸ்ட்

Actor Suriya X Post: நடிகர் சூர்யாவின் நடிப்பில் நாளை மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் ரெட்ரோ படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துடன் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் மற்றும் அஜய் தேவ்கானின் ரெய்ட் 2 ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி & ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா - வைரலாகும் போஸ்ட்

நடிகர் சூர்யா

Published: 

30 Apr 2025 22:03 PM

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ரெட்ரோ (Retro). சூர்யாவின் 44-வது படமாஅன இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக கண்ணாடிப்பூவே பாடல் மற்றும் கனிமா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இணையத்திலும் இந்தப் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3 மற்றும் அஜய் தேவ்கனின் ரெய்டு 2 படங்களுடன் போட்டிப் போட உள்ளது. ஏனெனில் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில், அதாவது மே 1 அன்று வெளியாகின்றன. இந்த நிலையில் படங்களின் வெளியீட்டிற்கு முன்னதாக, நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சக நடிகர்கள் சசிக்குமார், நானி மற்றும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த எக்ஸ் தள பதிவு இணையம் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. தனது எக்ஸ் தள பதிவில் நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவில் கூறியதாவது, அன்புள்ள சசி & சிம்ரன், நானி, அஜய் சார் & ரித்தேஷ், டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட் 2 -வின் அனைத்து நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மேலும் அன்பான ரசிகர்களே ரெட்ரோவிற்கான உங்கள் ஆதரவிற்கு நிறைய அன்பும் மரியாதையும்… எங்கள் ஒவ்வொரு படமும் வெற்றிபெறட்டும், நாளை திரையரங்குகளில் பார்வையாளர்களை மகிழ்விக்கட்டும் என்றும் நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.