Suriya : ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா.. இயக்குநர் நெகிழ்ச்சி!

Suriya Met The Tourist Family Film Crew : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்துடன் வெளியாகி வெற்றிபெற்ற டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை நடிகர் சூர்யா நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

Suriya : டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா..  இயக்குநர் நெகிழ்ச்சி!

டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை சந்தித்த சூர்யா

Updated On: 

23 May 2025 21:06 PM

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது முற்றிலும் பீல் குட் பேமிலி என்டர்டைமென்ட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படமானது இலங்கை அகதி குடும்பம் ஒன்று தமிழகத்தில் எவ்வாறு தங்களின் வாழ்க்கையைச் சமாளிக்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் மூல கதையாகும். இந்த படம் நடிகர் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) மற்றும் நானியின்(Nani) ஹிட் 3 (Hit3) திரைப்படம் வெளியான அதே 2025ம் மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமும் சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் போலத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படமானது உலகளாவிய வசூலில் இதுவரைக்கும் சுமார் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேலும் நடிகர் சூர்யாவும் (Suriya praised), டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சி பதிவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டுள்ளார். தனது திரைப்படமான ரெட்ரோ படத்துடன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்தை எந்தவித, பொறாமையோ அல்லது ஏற்ற தாழ்வோ இல்லாமல் நடிகர் சூர்யா அழைத்துப் பாராட்டிய செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவின் கீழ் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார். அதில் அவர் இந்த விஷயமானது எப்படி நடந்தது என எனக்கே தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவம் எனது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சூர்யா சார் என்னது பெயரை அழைத்து, டூரிஸ்ட் பேமிலி படம் எவ்வளவு பிடிக்கும் என்று கூறினார்.

நான் வாரணம் ஆயிரம் படத்தை 100 முறை பார்த்திருக்கிறேன், ஆனால் இன்று அவரை பார்த்தது நன்றியுடன் அழுதேன், நன்றி சூர்யா சார் என்று இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அதில் எழுதியிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இன்று டூரிஸ்ட் பேமிலி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் வெற்றிப்பட்ட டூரிஸ்ட் பேமிலி :

சசிகுமார், சிம்ரனின், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன் என சிறந்த நடிகர்கள் இந்த டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது இளங்கலை தமிழர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படமானது வெளியாகி சுமார் 3 வாரங்களைக் கடந்த நிலையில், இதுவரை ரூ 75 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.