டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும் – நடிகர் சிம்பு பேச்சு

Actor Simbu: நடிகர் சந்தானம் நடிப்பில் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிம்பு டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து வெகுவாக பாராட்டியது ரசிகரக்ளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும் - நடிகர் சிம்பு பேச்சு

நடிகர் சிம்பு

Published: 

06 May 2025 07:58 AM

தமிழி சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என எல்லா துறைகளிலும் தனது பெயரைப் பதித்தவர் டி. ராஜேந்தர். இவரது மூத்த மகன் தான் சிலம்பரசன் (Silambarasan). ரசிகர்கள் இவரை சிம்பு அல்ல எஸ்.டி.ஆர் என்று அன்புடன் அழைப்பார்கள். தந்தையின் இயக்கத்தில் சிறு வயதிலேயே நடிப்பு துறைக்குள் என்ட்ரி கொடுத்துவிட்டார் சிம்பு. மேலும் தனது தந்தையைப் போலவே தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என எல்லா துறைகளிலும் தனது பெயரைப் பதித்துக்கொண்டார் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் சிம்பு. இவர் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் (Thug Life) படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் சமூக வலைதளப் பதிவு:

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 5-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு தற்போது எல்லாம் சினிமாவில் காமெடி குறைவாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் சமீபத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வரவேண்டும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்தார். மேலும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியான படங்கள் வரவேண்டும் என்றால் சந்தானம் என்னை போன்ற ஆர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.

அதற்கு ஒரு ஆரம்பமாகதான் நடிகர் சந்தானம் எஸ்.டி.ஆர் 49 படத்தில் இணைந்துள்ளார். இனி சந்தானத்தை நிறைய படங்களில் பார்ப்பீர்கள் என்றும் சிம்பு தெரிவித்தார். காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்த சந்தானம் ஹீரோ ஆன பிறகு தொடர்ந்து முன்னணி வேடங்களில் மட்டுமே நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.