Silambarasan : STR 49ல் இந்த கேரக்டர்தான் – மேடையில் ஓபனாக பேசிய சிம்பு!
Actor Silambarasan Character In STR 49 : நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் பத்து தல படத்தைத் தொடர்ந்து தக் லைப் படமானது பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிக்கவுள்ள STR 49ல், அவர் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி நிகழ்ச்சி மேடையில் சிம்பு பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நாயகனாக இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் வெளியாகி பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல (Pathu Thala). இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்து அசத்தியிருந்தார். இதனையடுத்து நடிகர் கமல் ஹாசனின் (kamal Haasan) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் (Thug Life) படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்து ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, STR 49 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது.
மேலும் 2025, மே இறுதியில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளதாம். இதைத் தொடர்ந்து சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிம்பு, STR 49 திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிக் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சிம்பு “நானும் STR 49 திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறேன், அதை இயக்குநர் என்னிடம் கூறியுள்ளார். நான் பார்ப்பதற்குக் கல்லூரி மாணவனைப் போல் இருக்கிறேனா?” என அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கேட்டிருந்தார் சிலம்பரசன்.
மேலும் கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் சிலம்பரசனின் கேள்விக்குப் பதில் அளித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் STR 49 திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.
சிலம்பரசனின் STR 49 படக்குழு வெளியிட்ட பதிவு :
A glimpse into what happened at the #STR49 poojai❤️
The union of all our favorite names, at one place
🔗:-https://t.co/HBpEbLjnoS@SilambarasanTR_ @ImRamkumar_B @iamsanthanam @AakashBaskaran @SaiAbhyankkar @11Lohar @kabilanchelliah @philoedit @PraveenRaja_Off @manojdft… pic.twitter.com/f8gI42tr02
— DawnPictures (@DawnPicturesOff) May 4, 2025
நடிகர் சிலம்பரசனின் இந்த STR 49 திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு இணையான ரோலில் நடிகர் சந்தனமும் நடிக்கவுள்ளார். இவர் பல ஆண்டுகளுக்குப் பின் சிலம்பரசனுடன் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தரமான அதிரடி ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளார். இந்த படமானது தமிழில் இவரின் 2வது திரைப்படமாகும். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் ஜி.வி. பிரகாஷுடனும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிலம்பரசனின் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவர் இப்படத்திற்காக 3 பாடல்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிலம்பரசனின் இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் வித்தியாசமாக உருவாக்கி வருகிறது.மேலும் இந்த திரைப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் அல்லது 2025ம் ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.